தமிழகத்தில் +1 தேர்வு முடிவுகள் வெளியானது.. முதல் மூன்று இடங்களை பிடித்து கொங்கு மண்டலம் அசத்தல்!

Author: Udayachandran RadhaKrishnan
14 May 2024, 10:41 am

தமிழகத்தில் +1 தேர்வு முடிவுகள் வெளியானது.. முதல் மூன்று இடங்களை பிடித்து கொங்கு மண்டலம் அசத்தல்!

தமிழகத்தில் 2023-2024ஆம் ஆண்டிற்க்கான +1 தேர்வு கடந்த மார்ச் மாதம் 4ம் தேதி தொடங்கி மார்ச் 25 ம் தேதி வரை நடைபெற்றது.

இந்த பொதுத்தேர்வை மொத்தம் 8 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் எழுதி உள்ளனர். இந்நிலையில் 11ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு தற்போது வெளியாகி உள்ளது.

தற்போது வெளியாகி உள்ள இந்த 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளில் மொத்தம் 91.17% சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதிலும் குறிப்பாக மாணவர்களை விட, மாணவிகளே 7.43% சதவீதம் பேர் அதிக தேர்ச்சி பெற்றுள்ளனர்.

மேலும் படிக்க: அண்ணாமலை ஒரு FRAUD.. தமிழர்களை தீவிரவாதி என கூறிய பாஜக எம்பியை ஏன் கண்டிக்கவில்லை? செல்வப்பெருந்தகை!

தேர்வு எழுதிய +1 மாணவ, மாணவியர் பொதுத்தேர்வு முடிவுகளை அதிகாரப்பூர்வ இணையதளங்களான www.tnresults.nic.in மற்றும் www.dge.tn.gov.in ஆகிய இணையதளங்கள் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.

மதிப்பெண் விபரங்களைத் தெரிந்துக் கொள்ள மாணவர்கள் தங்கள் பதிவு எண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை கொண்டு உள்நுழைந்து தெரிந்து கொள்ளலாம். மேலும் SMS மூலமாகவும் தங்களது தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளும் ஏற்படும் செய்யப்பட்டுள்ளது.

+1 தேர்வில் 96.02% தேர்சியுடன் கோவை மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது. 95.56% தேர்ச்சியுடன் ஈரோடு மாவட்டம் 2ஆம் இடத்தையும், 95.23% தேர்ச்சியுடன் திருப்பூர் மாவட்டம் 3ஆம் இடத்தையும் பிடித்தன

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ