மதுபோதையில் சாலையோரம் கிடந்த மாணவியை மீட்டு விசாரித்ததில் பாலியல் பலாத்காரத்துக்கு முயற்சித்தது தெரியவந்துள்ளது.
சேலம் மாநகரம் அழகாபுரம் பகுதியில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு 11ஆம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவி ஒருவர்,மது போதையால் மயங்கிய நிலையில் சாலையோரம் கிடந்துள்ளார்.
இதனை அவ்வழியாக நடந்து சென்று பொதுமக்கள் பார்த்து அந்த பள்ளி மாணவியை உடனடியாக மீட்டு, சேலம் அரசு மருத்துவமனைக்கு காவல் துறையினர் உதவியுடன் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
பள்ளி மாணவியை பரிசோதித்த மருத்துவர்கள் , மாணவி மதுபானம் கலந்த குளிர்பானத்தை அதிக அளவில் அருந்தியுள்ளார் என்று காவல்துறையினரிடம் கூறினார் .
இது குறித்து அழகாபுரம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அழகாபுரம் பகுதியில் மாணவி மயங்கி விழுந்து கிடந்த இடத்தின் அருகே உள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு மேற்கொண்டனர்.
அப்பொழுது வாலிபர் ஒருவர் மாணவியை இருசக்கர வாகனத்தில் அமர வைத்து, அழைத்து வந்து சாலையோரம் இறக்கி, படுக்க வைத்து சென்றது சிசிடிவி கேமரா மூலம் தெரியவந்தது.
இதையும் படியுங்க: சாலையில் சென்று கொண்டிருந்த காரில் திடீர் தீ விபத்து : கனநேரத்தில் உயிர்தப்பிய நபர்கள்!
பின்னர் அதில் இருந்த வாலிபரின் அடையாளத்தை வைத்து , விசாரணை நடத்தி சேலம் அழகாபுரம் அருகே ராமன்குட்டை பகுதியை சேர்ந்த கோவிந்தசாமி(36) என்பது தெரிய வந்து , அவரை போலீசார் அதிரடியாக கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இதில் கோவிந்தசாமி , அழகாபுரம் அருகே பழைய இரும்பு கடை வைத்துள்ளதாகவும் , தனது கடைக்கு அருகே உள்ள பள்ளியில் படித்த மாணவி ஒருவர், அவ்வப்போது அருகே உள்ள இரும்பு கடைக்கு வந்து வேலை பார்த்து வந்துள்ளார்.
அப்போது இருவருக்கும் நட்பு ஏற்பட , மாணவியிடம் ஆசை வார்த்தை கூறி அருகே உள்ள காட்டுப் பகுதிக்கு கோவிந்தசாமி பள்ளி மாணவியை அழைத்து சென்றுள்ளார். அப்பொழுது கோவிந்தசாமி மாணவிக்கு குளிர்பானத்தில் மதுவை கலந்து கொடுத்து குடிக்க வைத்துள்ளார்.
இதில் மாணவிக்கு போதை தலைக்கு ஏறியது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திய கோவிந்தசாமி மாணவியிடம் பாலியல் பலாதரத்தில் ஈடுபட முயன்ற போது, திடீரென மாணவிக்கு வலிப்பு வர பயந்து போன கோவிந்தசாமி மயங்கி நிலையில் இருந்த பள்ளி மாணவியை , தனது இருசக்கர வாகனத்தில் உட்கார வைத்து அழகாபுரம் பகுதியில் இறக்கி விட்டு சென்றதாக விசாரணையில் தெரியவந்தது.
இந்த நிலையில் அழகாபுரம் போலீசார் இரும்பு கடை வியாபாரி கோவிந்தசாமி மீது போக்சோ வழக்கு பதிவு செய்து, சேலம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
பள்ளி மாணவிக்கு குளிர்பானத்தில் மதுபான கலந்து குடிக்க வைத்த சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
2 வருடமாக நடிகை ராஷி கண்ணாவுடன் பழகி வருவதாகவும், அவர் சத்தியம் செய்து கொடுத்ததை பிரபல நடிகராக ஓபன் கூறியுள்ளார்.…
சென்னையில், இன்று (பிப்.25) ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 20 ரூபாய் உயர்ந்து 8 ஆயிரத்து 75 ரூபாய்க்கு…
நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகுவதாக, ராணிப்பேட்டை மாவட்டச் செயலாளர் பாவேந்தன் அறிவித்துள்ளது கட்சியினுள் பேசுபொருளாகியுள்ளது. ராணிப்பேட்டை: நாம் தமிழர்…
ஏப்ரலில் வெளியாகவுள்ள குட் பேட் அக்லி படம் மீது அஜித்குமார் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கின்றனர். சென்னை: மைத்ரி…
தியேட்டரை காலி பண்ணும் விடாமுயற்சி அஜித் நடிப்பில் வெளிவந்த விடாமுயற்சி திரைப்படத்தின் OTT ரிலீஸ் தேதியை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது.இதனால்…
மாணவர்களை கெடுக்கும் சினிமா தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளிவந்த புஷ்பா திரைப்படம் மாணவர்களின் மனநிலையை கெடுத்து வைக்கிறது…
This website uses cookies.