தஞ்சையில் ஓய்வுபெற்ற ஆசிரியர் வீட்டில் 1 கிலோ வெள்ளி நகையை களவாடிய மர்மநபர்கள்: போலீசார் தீவிர விசாரணை…!!

Author: Rajesh
23 March 2022, 8:47 am

தஞ்சையில் ஓய்வுபெற்ற ஆசிரியர் வீட்டில் 1 கிலோ வெள்ளி நகை திருடு போன சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தஞ்சை மாதாக்கோட்டை ரோடு காவேரி நகரை சேர்ந்தவர் புண்ணியமூர்த்தி ஓய்வுபெற்ற ஆசிரியர். இவரது மனைவி சத்தியவதி (68). சம்பவத்தன்று இவர்கள் சென்னையில் உள்ள மகள் வீட்டுக்கு சென்றுவிட்டனர். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாததை அறிந்த மர்மநபர்கள் முன்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்தனர்.

பீரோவை திறந்து 1 கிலோ வெள்ளி, அரை பவுன் தங்க நகையை திருடி தப்பி ஓடிவிட்டனர். கதவு உடைக்கப்பட்டு கிடப்பதை பார்த்த அக்கம் பக்கத்தினர் சத்தியவதிக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அவர் தமிழ்பல்கலைக்கழக போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் பார்வையிட்டு விசாரணை நடத்தினர். வீட்டில் பதிவாகியிருந்த தடயங்களை சேகரித்தனர். இது பற்றிய புகாரின் பேரில் விசாரணை நடத்தி மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

இதேப்போல் தஞ்சை மாதாக்கோட்டை ரோடு குழந்தையேசு கோவில் நகரில் உள்ள ஒரு வீட்டில் ஒரு கதவை உடைத்து மர்மநபர்கள் திருட முயன்றனர். அதற்குள் வீட்டில் உள்ளவர்கள் எழுந்து சத்தம் போட்டதால் அவர்கள் தப்பி ஓடி விட்டனர். இது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 1352

    0

    0