அடிக்கடி கதறி அழுத பச்சிளம் குழந்தை… விரக்தியில் தாய் செய்த செயல் ; ரத்தத்தோடு மருத்துவமனைக்கு தூக்கிச் சென்ற போது நிகழ்ந்த சோகம்..!!

Author: Babu Lakshmanan
28 July 2023, 1:01 pm

மதுரை ; மதுரை வாடிப்பட்டி அருகே பெற்ற ஒரு மாத குழந்தையை கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு குழந்தை இறந்துவிட்டதாக மருத்துவமனைக்கு தூக்கி சென்று நாடகமாடிய கொடூர தாய் கைது செய்யப்பட்டார்.

மதுரை மாவட்டம் வாடிப்பட்டிஅருகே சல்லக்குளத்தை சேர்ந்தவர் சிவராஜ்-ஜீவிதா தம்பதி. சிவராஜ் எலக்ட்ரீசியனாகவும், ஜீவிதா தனியார் மருத்துவமனையில் நர்சாகவும் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு திருமணமாகி 8 ஆண்டுகள் ஆன நிலையில்,
குழந்தை இல்லாமல் தவித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், ஜீவிதா கடந்த ஆண்டு கர்ப்பம் தரித்த நிலையில், அரசு மருத்துவமனையில் கடந்த மாதம் ஆண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தைக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டு அடிக்கடி அழுவதாலும், உடல் முழுவதும் சரும நோய் ஏற்பட்டு தவித்து வந்ததால், விரக்தியடைந்த ஜீவிதா குழந்தையை பிளேடால் கழுத்தையறுத்து கொலை செய்துவிட்டு, எதுவும் தெரியாதது போல்
தொட்டில் கழுத்தை இறுக்கி ரத்தம் வந்ததாக வீட்டில் நாடகமாடியுள்ளார்.

இதையடுத்து, வாடிப்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சென்றபோது வழியில் குழந்தை பரிதாபமாக இறந்துள்ளது. குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை இறந்ததை உறுதி செய்து, சந்தேகமடைந்து வாடிப்பட்டி போலிசாருக்கு தகவல் கொடுத்தனர்.

விரைந்து சென்ற போலீசார் தாய் ஜீவிதாவிடம் அதிரடியாக விசாரணை நடத்தியதில், குழந்தையை கழுத்தை அறுத்து கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். ஜீவிதாவை கைது செய்த போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெற்ற குழந்தையை தாயே கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு நாடகமாடிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

  • kalanidhi maran office 8th floor was locked for many years கலாநிதி மாறன் அலுவலகத்தில் அமானுஷ்யம்? 8 ஆவது மாடியில் அப்படி என்ன இருக்கிறது?
  • Close menu