பரிட்சைக்கு படிக்காம செல்போனை நோண்டுனா எப்படி பாஸ் ஆகுவ.. பெற்றோர் திட்டியதால் +1 மாணவி விபரீத முடிவு!

Author: Udayachandran RadhaKrishnan
17 September 2024, 1:03 pm

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் ஒன்றியம் மாரம்பாடி கஸ்தூரி நகரை சேர்ந்தவர் ஜெகன் அவரது மனைவி கலாராணி இவர்களுக்கு சௌமியா என்ற மகளும் ஒரு மகனும் உள்ளனர்.

சௌமியா அரசு உதவி பெறும் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வருகிறார். சௌமியா செல்போனை பார்த்துக் கொண்டே இருந்துள்ளார்.

இதனைக் கண்ட அவரது தாயும் தந்தையும் நாளை பரீட்சை உள்ளது அதனால் பரீட்சைக்கு படிக்காமல் செல்போனை பார்த்துக் கொண்டே இருந்தால் எப்படி பரீட்சை எழுத முடியும் என்று கடுமையாக திட்டி உள்ளனர்.

இதனால் மனம் வெறுத்த சௌமியா வீட்டுக்குள் சென்று தனது துப்பட்டாவால் தூக்கு மாட்டிக் கொண்டார். உடனடியாக அவரை மீட்ட பெற்றோர்கள் செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணி அளவில் வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு வந்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

மேல் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பரிந்துரை செய்தனர்.

மேலும் படிக்க: டெல்லியை ஆளும் 3வது பெண் முதலமைச்சர்.. அதிஷி பெயரை முன்மொழிந்த கெஜ்ரிவால்..!!

வேடசந்தூரில் 108 ஆம்புலன்ஸ் இல்லாத காரணத்தால் ஒரு மணி நேரத்திற்கு மேலாக உயிருக்கு போராடிக் கொண்டிருந்த மாணவியை திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முடியாமல் உறவினர்கள் தவித்தனர்.

இதேபோல் ஞாயிற்றுக்கிழமை இரவு விபத்தில் படுகாயம் அடைந்த விட்டல் நாயக்கன்பட்டியைச் சேர்ந்த நூற்பாலை தொழிலாளி காளிமுத்து விபத்து ஏற்பட்டும் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக வேடசந்தூரில் ஆம்புலன்ஸ் இல்லாததால் உயிரிழந்த சம்பவம் குறிப்பிடத்தக்கது.

  • Keerthy Suresh new glamorous look கவர்ச்சி உடையில் பிரபல நடிகருடன் குத்தாட்டம்…வைரலாகும் கீர்த்தி சுரேஷ் வீடியோ..!
  • Views: - 286

    0

    0