கொடைக்கானலில் உள்ள ஓட்டலில் உணவு சாப்பிட்ட கேரள சுற்றுலா பயணிகள் 10 பேருக்கு வாந்தி : உணவகத்துக்கு சீல் வைத்த அதிகாரிகள்!!

Author: Udayachandran RadhaKrishnan
29 March 2022, 3:15 pm

கொடைக்கானல் : தனியார் உணவு விடுதியில் உணவு அருந்திய கேரளா சுற்றுலா பயணிகள் 10 நபர்களுக்கு வயிற்று போக்கு மற்றும் வாந்தி ஏற்பட்டதை தொடர்ந்து,தனியார் உணவு விடுதி தற்காலிகமாக பூட்டப்பட்டு அதிரடி நடவடிக்கை

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் ஏரிச்சாலை அருகே தனியார் உணவு விடுதி இயங்கி வருகிறது. இந்த உணவு விடுதியில் நேற்று இரவு 10க்கும் மேற்பட்ட கேரளா சுற்றுலா பயணிகள் உணவு அருந்தி சென்றுள்ளனர்.

அதனையடுத்து நள்ளிரவில் உணவு அருந்தி சென்ற 10 சுற்றுலா பயணிகளுக்கும் வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தி எடுத்ததை தொடர்ந்து கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளனர்.

சிகிச்சை அளித்த மருத்துவர்கள் காலாவதியான மீன் குழம்பு சாப்பிட்டதால் வயிற்றுப்போக்கு ஏற்பட்டதாக தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து உணவு பாதுகாப்பு துறை அலுவலரிடம் புகார் அளிக்கப்பட்டது.

புகாரின் அடிப்படையில் ஏரிச்சாலை அருகே இயங்கிய தனியார் உணவு விடுதியில் உணவு பாதுகாப்பு துறை அலுவலர் சோதனை செய்யும் போது மதிய உணவுக்கு தயராக இருந்த காலாவதியான இறைச்சிகள் கண்டறியப்பட்டது.

அதனை தொடர்ந்து சுமார் 10கிலோ காலாவதியான கோழி,மீன் மற்றும் வண்ணம் ஏற்றப்பட்ட இறைச்சி மற்றும் நீண்ட நாட்களான பருப்புகள் வகைகள் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது.

இதனையடுத்து உணவு சமைக்கும் அறை சுகாதாரமற்ற நிலையில் இருந்ததை தொடர்ந்து எச்சரிக்கை நோட்டீஸ் அளிக்கப்பட்டு தற்காலிகமாக உணவு விடுதி பூட்டப்பது. மேலும் 2000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.

மேலும் சமையல் செய்யும் உணவு இறை புதுப்பித்த பிறகும், உணவு விடுதியில் பணியாற்றும் பணியாளர்களுக்கு உடல் தகுதி மற்றும் டைபாய்டு ஊசி செலுத்தி கொண்ட சான்றிதழ் சரிபார்த்த பிறகும் உணவு விடுதி திறக்கப்படும் என தனியார் உணவு விடுதி உரிமையாளருக்கு உணவு பாதுகாப்பு துறை அலுவலர் எச்சரித்து சென்றார்.

அதனை தொடர்ந்து கே.ஆர்.ஆர் கலையரங்கம் பகுதியில் தனியார் உணவு விடுதிகள், இறைச்சி மற்றும் தேனீர் கடைகளில் சோதனை செய்ததில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் கண்டறியப்பட்டு 2000ரூபாய் அபராதம் தொகை விதிக்கப்பட்டது.

மேலும் கொடைக்கானலில் காலாவதியான உணவு பொருட்களை சுற்றுலா பயணிகளுக்கு வினியோக‌ம் செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உணவு பாதுகாப்பு துறை அலுவலர் எச்சரித்துள்ளார்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 1263

    0

    0