டாஸ்மாக்கில் மாயமான 10 லட்சம் ரூபாய் மதுபானம்:செய்தியாளர்களை ஒருமையில் பேசி தகராறு செய்த டாஸ்மாக் ஊழியர்கள்…!!

Author: Sudha
16 August 2024, 6:39 pm

திருவள்ளூர் மேற்கு மாவட்ட டாஸ்மாக் குடோனில் இருந்து 265-க்கும் மேற்பட்ட கடைகளுக்கு மதுபானங்கள் விநியோகிக்கப்பட்டு வருகிறது. இந்த குடோன் வளாகத்திலேயே டாஸ்மாக் மாவட்ட மண்டல மேலாளர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது.

லாரிகளில் ஒப்பந்த அடிப்படையில் பணி புரியும் தொழிலாளர்கள் மதுபான பாட்டில்களை பெட்டி பெட்டியாக ஏற்றி அனுப்புவது வழக்கம். இதனை டாஸ்மாக் ஊழியர்கள் ஆய்வு செய்து அதன் பிறகே அனுப்பப்படுவது வழக்கம். திருவள்ளூர் மேற்கு மாவட்ட டாஸ்மாக் மேலாளர் பணி காலியாக இருப்பதால் கிழக்கு மாவட்ட மேலாளர் ரேணுகா பொறுப்பு அதிகாரியாக நிர்வகித்து வருகிறார். இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டம் காக்களூரில் உள்ள டாஸ்மாக் குடோனில் ரூபாய் 10 லட்சம் மதிப்பிலான மதுபான பாட்டில்கள் காணாமல் போனதாக சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியானது.

இரண்டு மெயின் கேட்டுகள் காவலாளிகள் சிசிடிவி கேமரா என பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்த டாஸ்மாக் மண்டல அலுவல குடோனில் இருந்து எப்படி மது பாட்டில்கள் மாயம் ஆகியது சமூக வலைதளங்களில் எவ்வாறு இது வைரல் ஆனது என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்த உத்தரவிட்ட நிலையில் இன்று தொழில்பேட்டையில் உள்ள மண்டல டாஸ்மாக் மேலாளர் அலுவலகத்தில் ஆய்வு செய்தனர்.

இது குறித்து செய்தி சேகரிக்க வந்த செய்தியாளர்கள் மற்றும் புகைப்படக் கலைஞர்கள் ஒளிப்பதிவாளர்களை படம் பிடிக்க விடாமல் ஒருமையில் பேசி டாஸ்மாக் மண்டல அலுவலக ஊழியர்கள் காவலில் தகராறு செய்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

  • siruthai siva direct new film after kanguva flop தோல்வியில் இருந்து உதித்து எழப்போகும் கங்குவா இயக்குனர்? அடுத்த படத்துக்கு ரெடி ஆகும் சிறுத்தை சிவா! அதுவும் இந்த நடிகர் கூட?