அரசு பேருந்தில் கேட்பாரின்றி கிடந்த 10 சவரன் நகை.. ஓட்டுநரின் சமயோஜிதம் : உடனே நடந்த TWIST!
Author: Udayachandran RadhaKrishnan7 May 2024, 11:45 am
அரசு பேருந்தில் கேட்பாரின்றி கிடந்த 10 சவரன் நகை.. ஓட்டுநரின் சமயோஜிதம் : உடனே நடந்த TWIST!
சென்னை மாதவரத்திலிருந்து டிஎன்-45, என்-4421 என்ற பதிவெண் கொண்ட அரசுப் பேருந்து பயணிகளுடன் நேற்று இரவு 10மணிக்கு புறப்பட்டு திருச்சி நோக்கி வந்துக்கொண்டிருந்தது. இந்த பேருந்தில் பயணம் செய்த பெரம்பலூர் மாவட்டம் வடக்கு மாதவிரோடு பகுதியைச் சேர்ந்த மதீனா பீவி என்பவர் தனது தாய் மற்றும் பாட்டியுடன் அரசு பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்தார்.
பெரம்பலூரில் வந்து பயணிகளை இறக்கிவிட்ட அரசுப்பேருந்தில் மதீனாபீவி தங்கநகைகள், வெள்ளி நகைகள் கொண்டுவந்த கைப்பையை பேருந்திலேயே தவறவிட்டநிலையில், உடனடியாக பேருந்து பயணச்சீட்டினை பெரம்பலூர் அரசுபேருந்து கிளையில் கொடுத்து தங்களது தங்கநகைகள் பையை தவறவிட்டதை தெரிவித்தனர்.
இதனையடுத்து திருச்சி வந்து பயணிகளை இறக்கிவிட்டு மீண்டும் பணிமணைக்கு பேருந்தை நிறுத்திவிட்டு பேருந்து நடத்துநர் கோபாலன் பேருந்துகளை வழக்கம்போல ஆராய்ந்தார்.
அப்போது ஒருஇருக்கையில் பை ஒன்றும் அதனை திறந்துபார்த்தபோது தங்கநகைகள் இருந்ததைக் கண்டு உடனடியாக அதனை பணிமனை மேலாளாரிடம் ஒப்படைத்தார்.
அதேநேரம் தங்கநகைகள் தவறவிட்டது தொடர்பாக அரசுபேருந்து திருச்சி மண்டல அலுவலகத்திற்கு பெறப்பட்ட புகாரின்பேரில், நகைகளை தவறவிட்டவர்களிடம் பேருந்தில் நகைகள் அடங்கிய பை கண்டறியப்பட்டதை தெரிவித்து பின்னர் அவர்களை திருச்சி பேருந்து பணிமணைக்கு வந்து பெற்றுக்கொள்ளுமாறு தெரிவித்தனர்.
இதனையடுத்து தங்க ஆரம், நெக்லஸ், மோதிரம் உள்ளிட்ட 10பவுன் நகை, 149கிராம் வெள்ளி என சுமார் 5.5லட்சம் மதிப்பிலான நகைகளை கிளைமேலாளர் மற்றும் அதிகாரிகள் முன்னிலையில் உரிமையாளர்களிடம் ஒப்படைத்தனர்.
மேலும் படிக்க: இதை மட்டும் பண்ணுங்க.. ஒரு மணி நேரத்தில் ஜெயக்குமார் மரண வழக்கில் குற்றவாளிகள் பிடிபடுவர் : ஆர்பி உதயகுமார் ஐடியா!
மேலும் அரசு பேருந்து நடத்துனர், ஓட்டுநரின் நேர்மையையும் அவர்களின் ஒப்பற்ற செயலுக்கும் நன்றியினைத் தெரிவித்துன் கொண்டதுடன், பலரும் நடத்துனருக்கு பாராட்டுக்களை தெரிவித்துக்கொண்டனர்.