கொடைக்கானலில் அடுத்தடுத்து மோதிய 10 வாகனங்கள்… நூலிழையில் உயிர் தப்பிய சுற்றுலா பயணிகள்!

Author: Udayachandran RadhaKrishnan
7 September 2024, 3:54 pm

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் உலகளவிய சுற்றுலாத்தலமாகும். கொடைக்கானலுக்கு பல்வேறு இடங்களில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வருவது வழக்கம்.

குறிப்பாக வார விடுமுறை நாட்களில் கொடைக்கானலில் உள்ள பிரபல சுற்றுலா தளங்களில் அதிக அளவில் சுற்றுலா பயணிகள் குவிவார்கள்.
இந்நிலையில் வார விடுமுறையான இன்று பல்வேறு பகுதிகளில் இருந்து கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகள் வந்திருந்த நிலையில் கொடைக்கானலில் முக்கிய சுற்றுலாத் தலமாக உள்ள பைன்மரக்காடுகளில் உள்ள இயற்கை சீதோஷ்ண நிலையை அனுபவிக்கவும் புகைப்படங்களை எடுக்கவும் அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வருவார்கள்.

அதே போன்று இன்று அதிக அளவில் பயணிகள் பைன் மரக்காடுகளுக்கு வந்த நிலையில் தூத்துக்குடியில் இருந்து கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்த வேன் ஒன்று ஓட்டுனரின் காட்டுப்பாட்டு இழந்து இறக்கத்தில் வரிசையாக நிறுத்தப்பட்டிருந்த பத்துக்கும் மேற்பட்ட வாகனங்களை சில நொடிகளில் இடித்து தள்ளியது .

இதில் பைன் மரக்காடுகள் பகுதியில் இறங்கி நின்றிருந்த ஐந்துக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் படுகாயம் அடைந்த நிலையில் மீதமுள்ள சுற்றுலா பயணிகள் நொடி பொழுதில் உயிர் தப்பினர்.

முக்கிய சுற்றுலா தலமாக உள்ள இந்த பகுதியில் சரியாக ஒரு வருடத்திற்கு பிறகு மீண்டும் அதே பகுதியில் விபத்து ஏற்பட்டு இருக்கிறது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது .

கடந்த வருடம் இதே போன்று கடந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில் சரியாக ஒரு வருடத்திற்கு பிறகு மீண்டும் அதே இடத்தில் விபத்து ஏற்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தற்போது காயமடைந்துள்ள சுற்றுலாப் பயணிகளை கொடைக்கானல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
பலமுறை கோரிக்கை விடுத்தும் தற்போது வரை நெடுஞ்சாலைத் துறையினர் அந்த சாலையை சீர் செய்யவில்லை முறையாக பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படவில்லை என்ற குற்றச்சாட்டையும் முன் வைக்கிறார்கள் உள்ளூர் வாசிகள்.

  • Why no action is taken even after filing a complaint against Vijay and Trisha விஜய், திரிஷா மீது புகார் கொடுத்தும் ஏன் ஆக்ஷன் எடுக்கல ? சீறிய பெண் பிரபலம்!