10 வயது சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை : உடல் நலம் பாதிக்கப்பட்ட சிறுமி அரசு மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் சிகிச்சை!!

Author: kavin kumar
24 January 2022, 1:47 pm

திருவாரூர் : திருவாரூரில் 10 வயது சிறுமியை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவாரூர் அருகே ஐந்தாம் வகுப்பு படிக்கும் பத்து வயது சிறுமி தனது வீட்டின் வாசலில் நின்று கொண்டிருந்த பொழுது அடியக்கமங்கலம் புது காலனி தெருவைச் சேர்ந்த சேத்தப்பா 22 வயது என்கிற நபர் சிறுமியை வாயை கட்டி தூக்கி சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். பின்னர் சிறுமி அலறல் சத்தம் போட்டுக்கொண்டு வீட்டை நோக்கி ஓடி வந்து தனது பெற்றோரிடம் நடந்த சம்பவத்தை கூறியுள்ளார். உடனடியாக பெற்றோர்கள் மற்றும் அந்த பகுதியை சேர்ந்தவர்கள் சேத்தபாவை தேடிச் சென்ற பொழுது அந்த இடத்திலிருந்து சேத்தப்பா தப்பிச் சென்றுள்ளான்.

இந்த நிலையில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சிறுமி உடல் நலம் பாதிக்கப்பட்டு திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் இந்த சம்பவம் குறித்து திருவாரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான சேத்தப்பாவை காவல்துறையினர் தேடி வருகின்றனர். மேலும் சேத்தப்பா தனியார் கேட்டரிங் சர்வீஸில் பணிபுரிந்து வருவதாகவும் மதுபோதையில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தது காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.

  • Karthi accident on Sardar 2 set படப்பிடிப்பில் நடிகர் கார்த்திக்கு விபத்து…அவசர அவசரமாக சென்னை திரும்பிய படக்குழு.!