தாத்தா வயதில் செய்த சேட்டை… 10 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு… 77 வயது ஓய்வு பெற்ற போலிஸ் அதிகாரி கைது!

Author: Babu Lakshmanan
9 May 2024, 2:47 pm

குறிஞ்சிப்பாடியில் 10 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த 77 வயது ஓய்வு பெற்ற போலிஸ் அதிகாரி கைது செய்யப்பட்டார்.

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியில் காவல்துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற 77 வயதுடைய கிருஷ்ணமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவரது மகனும், கடலூர் மாவட்ட காவல்துறையிலேயே பணிபுரிந்து வருகிறார். இதில் கடந்த திங்கட்கிழமை இரவு கிருஷ்ணமூர்த்தி தனது வீட்டு அருகே உள்ள 10 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக சிறுமி தனது பெற்றோரிடம் கூறியுள்ளார்.

மேலும் படிக்க: ஜனாதிபதியை குறித்து கொச்சை பேச்சு.. பிரதமர் மோடி மீது பாஜக நடவடிக்கை எடுக்குமா..? கார்த்தி சிதம்பரம் கேள்வி..!!

இதைத் தொடர்ந்து சிறுமியின் பெற்றோர்கள் அளித்த புகாரின் பேரில் நெய்வேலி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்தனர். பின்னர், 10 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி கிருஷ்ணமூர்த்தியை போஸ்கோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

பத்து வயது சிறுமிக்கு ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி பாலியல் தொந்தரவு அளித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

  • Viduthalai Part 2 OTT releaseஅவ்ளோ தான் முடிச்சு விட்டீங்க போங்க…விடுதலை 2 ஓடிடி-க்கு ஓட்டம்..வெளிவந்த அப்டேட்..!
  • Views: - 592

    0

    0