பெண்கள், மாணவிகள் மீது தொடரும் அத்துமீறல்கள் : 10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை… அரசுப் பள்ளி ஆசிரியர் கைது!!

Author: Udayachandran RadhaKrishnan
21 March 2022, 9:12 pm

கோவை : 10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக அரசு பள்ளி ஆசிரியர் போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்துள்ளனர்.

கோவையை அடுத்த அன்னூர் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 5ஆம் வகுப்பு பாடம் எடுத்து வரும் ஆசிரியர் மாணிக்க சுந்தரம் (வயது 46),இவர் அப்பகுதியில் உள்ள 10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளதாக தெரிகிறது.

இதனையடுத்து பெற்றோர்கள் கடந்த 17 தேதி 10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக அன்னூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். இதனையடுத்து அன்னூர் போலிசார் ஆசிரியர் மாணிக்க சுந்தரத்தை கைது செய்து விசாரணை நடத்தியதில், முதற்கட்ட விசாரணையில் பாலியல் தொல்லை அளித்தது உண்மை என தெரியவந்துள்ளது.

இந்நிலையில் அரசு பள்ளி ஆசிரியர் மாணிக்க சுந்தரத்தை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அரசுப் பள்ளி ஆசிரியரே இம்மாதிரியான செயல்களில் ஈடுபட்டுள்ளதால் அப்பகுதியில் உள்ள பெற்றோர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 1425

    0

    0