ரூ.100 கொடுத்தால் ATTENDANCE… தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் கமிஷன் அடிக்கும் நிர்வாகிகள்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!
Author: Babu Lakshmanan2 August 2023, 9:36 am
100 ரூபாய் பணம் கொடுத்தால் தேசிய ஊரக வேலையில் பணிபுரிவதாக கணக்கு காட்டி, அதற்கான பணம் அவர்கள் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் என தலா ரூ.100 வசூல் செய்த வீடியோ சமூக வலைத்தளங்கள் பரவி வைரலாகி வருகிறது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பாவக்கல் ஊராட்சியில் தேசிய ஊரக வேலைவாய்ப்பில் பணிபுரிய பெண்களுக்கு அட்டை கொடுக்கப்பட்டு, அவர்களுக்கான பணிகளை பிரித்து வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், ஊராட்சி நிர்வாகத்தை சேர்ந்த ஊழியர்கள் மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தால் பணிதள பொறுப்பாளராக அனுமதிக்கப்பட்ட ஒரு சில நபர்கள் கிராமப்புற பெண்களிடையே பேசி, ஊரக வேலை வாய்ப்பு பணியில் வேளை புரிவதாக கணக்கு காட்ட வேண்டும் எனில் தலா அட்டைக்கு ஒரு ரூபாய் தினமும் கொடுத்தால் தங்களுக்கு பணிபுரிவது போல் கணக்கு காட்டி, அதற்கான பணத்தை தங்கள் வங்கி கணக்கில் வைக்கப்படும் எனவும், பணம் கொடுத்தவர்கள் இங்கு இருக்க வேண்டிய அவசியம் இல்லை வேண்டும் என்றால் மற்ற வேளைக்கு சென்று சம்பாதிக்கலாம் எனக் கூறி ஒரு நாளைக்கு 100 ரூபாய் என்று பணத்தை வசூல் செய்வதாக குற்றச்சாட்டு எழுந்து வந்தது.
அதனை வீடியோவாக பதிவிட்ட கிராமப்புற பெண்கள் எடுத்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் பரவி வருகிறது.
இது குறித்து ஊராட்சி ஒன்றிய அலுவலர்களிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்ட பொழுது, வீடியோ தங்களுக்கும் வந்ததாகவும், அது குறித்து முழு விசாரணை நடைபெற்று வருவதாகவும், விசாரணையில் பணம் பெற்றது உறுதியானால் அவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.