தமிழகத்தில் 100 டிஎஸ்பிக்கள் பணியிட மாற்றம்.. தேர்தல் ஆணையம் தலையீடு : டிஜிபி போட்ட உத்தரவு!

Author: Udayachandran RadhaKrishnan
1 February 2024, 10:56 am

தமிழகத்தில் 100 டிஎஸ்பிக்கள் பணியிட மாற்றம்.. தேர்தல் ஆணையம் தலையீடு : டிஜிபி போட்ட உத்தரவு!

நாடாளுமன்ற தேர்தலையொட்டி தமிழகம் முழுவதும் உள்ள 100 டி.எஸ்.பி.க்களை பணியிட மாற்றம் செய்து டி.ஜி.பி. சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.

3 ஆண்டுகள் ஒரே இடத்தில் பணிபுரியும் காவல்துறையினரை உடனடியாக மாற்ற வேண்டும் என டி.ஜி.பி. ஏற்கனவே சுற்றறிக்கை அனுப்பி இருந்த நிலையில், இந்த இடமாற்றம் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் தொடர்ச்சியாக ஐ.ஜி.க்கள் முதல் காவலர்கள் வரை பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

விரைவில் பாராளுமன்ற தேர்தலை நடைபெற உள்ளதையொட்டி தேர்தல் ஆணையம் கேட்டுக்கொண்டதற்கிணங்க காவல் துறையினர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

  • Ilayaraja Symphony நான் இசைக்கடவுளா? ரசிகர்களுக்கு இளையராஜா இசைக் கட்டளை!