கடந்த மார்ச் 21 ஆம் தேதி புலியகுளம் கிட்னி சென்டர் அருகே உள்ள கிரீன் பீல்ட் காலனியில் வசித்து வந்த ராஜேஸ்வரி 63 என்பவருக்கு நாட்டுக்கோழி குழம்பில் மயக்க மருந்து கொடுத்து மயக்க நிலை அடைய வைத்து வர்ஷினி அவரது நண்பர் அருண்குமார், ஓட்டுநர் நவீன் குமார் ஆகியோர் ராஜேஸ்வரி வீட்டிலுள்ள தங்க வைர நகைகள் சுமார் 100 பவுன் மற்றும் பணம் ரூபாய் 2-1/2 கோடி ஆகியவற்றை திருடி சென்றுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக ராஜேஸ்வரி கொடுத்த புகாரின் பேரில் ராமநாதபுரம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து குற்றத்தில் தொடர்புடைய கார்த்திக் மற்றும் சுரேந்தரை மார்ச் மாதம் 24 ஆம் தேதி கைது செய்தனர்.
இதைத்தொடர்ந்து சம்பவத்திற்கு பயன்படுத்திய KA 09 MA 6594 என்ற பதிவு எண் கொண்ட HONDA BRIO சிவப்பு கலர் காரும் கைப்பற்றப்பட்டது.இதைத் தொடர்ந்து அருண்குமார் என்பவர் கைது செய்யப்பட்டார்.
மேலும் அருண்குமார் திருடிக் கொண்டு சென்ற பணம் ரூபாய் 3,120500/- சேலம் வருமான வரித்துறையினரால் கைப்பற்றப்பட்டது. இந்த நிலையில் இந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகளான வர்ஷினி மற்றும் நவீன்குமார் ஆகிய இருவரையும் தனிப்படை போலீசார் இன்று கைது செய்தனர்.
கைது செய்து வர்ஷினியிடம் சுமார் 70 சவரன் தங்க வைர வளையல்கள் மற்றும் பணம் ரூபாய் 35 இலட்சம் TN 37 DH 8000 BREZZA என்ற கார் மற்றும் I- Phone ஒன்றையும், நவீன்குமாரிடம் இருந்து பணம் ரூபாய் 5 இலட்சம் மற்றும் TN 37 DH 5637 ALTO காரையும் கைப்பற்றப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இவ்வழக்கில் மொத்தம் தங்க வைர நகைகள் 100 சவரன் மற்றும் பணம் ரூபாய் 4800000/- இலட்சம் மற்றும் I-Phone ஒன்று ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளது.
இதில் பணம் ரூபாய் 3120500/- இலட்சத்தை சேலம் வருமான வரித்துறை அலுவலகத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.மேலும் வர்ஷினிக்கு பொள்ளாச்சி கிழக்கு, தாராபுரம் காவல் நிலையம், சிங்காநல்லூர் மற்றும் கோவை மாநகர குற்ற பிரிவிலும் வழக்குகள் நிலுவையில் உள்ளது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பிக்பாஸ் ஜோடி தெலுங்கு தொலைக்காட்சித் தொடர்களின் மூலம் தனது ஆக்டிங் கெரியரை தொடங்கியவர் பாவனி. அதனை தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில்…
ஆந்திர மாநிலம் விஜயநகரம் நகரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் ஒரு மாணவி செல்போன் பேசிக் கொண்டிருந்ததால் ஆத்திரமடைந்த ஆசிரியை…
பட்டத்தை திறந்த கமல் பல ஆண்டுகளாகவே கமல்ஹாசனை நாம் உலக நாயகன் என்றே அழைத்து வந்தோம். ஆனால் திடீரென சென்ற…
அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படம் சமீபத்தில் வெளியாக கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. குறிப்பாக அஜித் ரசிகர்களுக்கு இந்த…
பேருந்தில் பயணம் செய்த போது கண்டக்டருடன் ஏற்பட்ட கள்ளக்காதல் சம்பவத்தில் திருப்பம் ஏற்பட்டுள்ளது. கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகர் இருகே…
புதுமையான ஆக்சன் படம் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே மாதம் 1 ஆம்…
This website uses cookies.