கேப்டன் என்ற வார்த்தைக்கு 100% பொருத்தமானவர்.. லட்சக்கணக்கான ரசிகர்களில் நானும் ஒருவன் ; நடிகர் சூரி உருக்கம்!
Author: Udayachandran RadhaKrishnan28 December 2023, 7:35 pm
கேப்டன் என்ற வார்த்தைக்கு 100% பொருத்தமானவர்.. லட்சக்கணக்கான ரசிகர்களில் நானும் ஒருவன் ; நடிகர் சூரி உருக்கம்!
தேமுதிக தலைவரும் நடிகருமான விஜயகாந்த் இன்று காலை சென்னை தனியார் மருத்துவமனையில் உடல் நலக்குறைவால் காலமானார். சென்னை தேமுதிக அலுவலகத்தில் அவரது உடல் வைக்கப்பட்டு திரைத்துறையினர், அரசியல் தலைவர்கள் பொதுமக்கள் ஆகியோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் தேனியில் நடைபெற்ற படப்பிடிப்பில் சசிகுமார், சூரி மற்றும் படக்குழுவினர், மறைந்த விஜயகாந்த் புகைப்படத்திற்கு மலர் தூவி இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினர்.
நடிகர் விஜயகாந்த் மறைவு குறித்து தாங்க முடியாத லட்சக்கணக்கான ரசிகர்களில் நானும் ஒருவன், கேப்டன் என்கிற வார்த்தைக்கு 100% பொருத்தமானவர் விஜயகாந்த் சார் என்று நடிகர் சூரி உருக்கமாக தெரிவித்தார்.