சதம் அடித்த தக்காளி… தாறுமாறாக விலை உயர்ந்ததால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி.. ஐடியா தந்த தமிழக அரசு!!

Author: Udayachandran RadhaKrishnan
27 June 2023, 5:50 pm

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அண்ணாசாலை பகுதியில் தினசரி சந்தை செயல்பட்டு வருகிறது. இங்கு கொடைக்கானலில் விளையும் மலைக்காய்கறிகளும், வெளி மாவட்டங்களில் விளைய‌க் கூடிய தக்காளி, வெங்காயம், பச்சை மிளகாய், வெண்டைக்காய், கத்திரிக்காய், முருங்கை காய் உள்ளிட்ட ப‌ல்வேறு வ‌கையான‌ காய்கறிகளை கொள்முதல் செய்து வந்து கொடைக்கானலில் தினசரி மற்றும் வார சந்தையில் விற்பனை செய்வது வழக்கம்.

இந்நிலையில் கொடைக்கானல் மலைப்பகுதியில் நேற்று முதல் ஒரு கிலோ தக்காளி 100 ரூபாய்க்கு விற்பனையாவதால் இல்ல‌த்த‌ர‌சிக‌ள், வாடிக்கையாளர்கள், உண‌வு விடுதி உரிமையாள‌ர்க‌ள் குறைந்த அளவிலான தக்காளிகளை வாங்கி செல்கின்றனர்.

மேலும் காய்கறி கடை விற்பனையாளர்கள் ம‌ழை, வெயில் என‌ கால‌நிலை மாறுப‌டுவ‌தால் குறைந்த அளவில் ம‌ட்டும் கொள்முதல் செய்து விற்பனையில் ஈடுப‌ட்டு வருகின்றனர்.

மேலும் குறைந்த‌ அள‌வில் கொள்முத‌ல் செய்வ‌தால் தட்டுப்பாடு நிலவுவதுடன் ப‌ல்வேறு த‌ர‌ப்பின‌ரும் பாதிக்கப்பட்டுள்ளனர்,

இது குறித்து காய்கறி கடை விற்பனையாளர்களிடம் கேட்கும் போது கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெய்த மழையால் த‌மிழ்நாட்டில் தக்காளி விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளதால், ஆந்திரா, க‌ர்நாட‌கா உள்ளிட்ட வெளி மாநிலங்களிலில் த‌க்காளி விளைச்ச‌ல் ச‌ராச‌ரியாக‌ இருப்பதால் த‌மிழ்நாட்டில் உள்ள‌ மொத்த‌ வியாபாரிக‌ள் குறைவாக‌ கொள்முத‌ல் செய்திருப்ப‌தாலும் த‌க்காளி விலை உயர்ந்துள்ளதாக விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

மீண்டும் தக்காளி விலை எப்போது குறையும் என எதிர்ப்பார்ப்பில் வாடிக்கையாளர்கள் ஆவலுடன் இருப்பதும் குறிப்பிடத்தக்கது…

  • Vijay Deverakonda and Rashmika Mandanna relationship ராஷ்மிகா போட்ட கண்டிஷன்..திருமணத்தை உதறிய விஜய் தேவரகொண்டா..!
  • Views: - 321

    0

    0