100 யூனிட் மின்சாரம் ரத்தா? வெளியான தகவல் : தமிழ்நாடு மின்சார வாரியம் விளக்கம்..!!

Author: Udayachandran RadhaKrishnan
17 May 2024, 8:44 pm

100 யூனிட் மின்சாரம் ரத்தா? வெளியான தகவல் : தமிழ்நாடு மின்சார வாரியம் விளக்கம்..!!

தமிழகத்தில் சுமார் 3 கோடி மின் இணைப்புகள் உள்ளன. அதில், வீட்டு உபயோக மின் இணைப்புகளுக்கு முதல் 100 யூனிட்கள் இலவசமாக வழங்கப்படுகிறது.

கடந்த 2022ம் ஆண்டு இறுதியில், மின் இணைப்பு எண்ணுடன், ஆதார் எண்ணை இணைக்குமாறு மின் வாரியம் உத்தரவிட்டது. ஒன்றிற்கு மேற்பட்ட மின் இணைப்பு வைத்திருப்பவர்களும்கூட, அனைத்து இணைப்புக்கும் ஒரே ஆதார் எண்ணை பதிவு செய்யலாம், அல்லது வாடகைக்கு விட்டிருந்தால், அவர்களின் ஆதார் எண்ணைக்கொண்டு வாடகைக்கு விட்டுள்ளதாக குறிப்பிட்டு பதிவு செய்யவும் அறிவுறுத்தப்பட்டது.

இதனால் 100 யூனிட் இலவச மின்சாரம் திட்டம் ரத்து செய்யப்படுமோ என அப்போதே மக்கள் மத்தியில் அச்சம் எழுந்தது. ஆனால், அப்போதைய மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, 100 யூனிட் மின்சாரம் ரத்து செய்யப்படாது என உறுதியளித்தார்.

இந்த நிலையில், சமீபத்தில் எடுக்கப்பட்ட மின் கணக்கீட்டில் தமிழகத்தில் பெரும்பாலானோருக்கு எப்போதும் செலுத்தும் தொகையை விட கூடுதலாக மின் கட்டணம் வந்ததால் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும் படிக்க: 6 பேருக்கு மறுவாழ்வு கொடுத்த 61 வயது முதியவர்.. திருச்சியில் நெகிழ்ச்சி சம்பவம்!!

100 யூனிட் மின்சாரம் ரத்து செய்யப்பட்டு, முழு யூனிட்டுக்கும் கட்டணம் வசூலித்திருப்பதாக தகவல் வெளியானது. இதனை தமிழக மின் வாரியம் மறுத்துள்ளது.

இது தொடர்பாக மின்வாரியம் தரப்பில் அளிக்கப்பட்டுள்ள விளக்கம்: ஒரு வீட்டின் உரிமையாளர் ஒன்றுக்கும் மேற்பட்ட இணைப்புகள் வைத்திருந்தால், அவருக்கு 100 யூனிட் மின்சாரம் மட்டுமே மானியமாக வழங்கப்படும். அதுவே வீட்டின் உரிமையாளர், அவரது வீட்டை வாடகைக்கு விட்டிருந்தால், அவர்களுக்கும் 100 யூனிட் மின்சார மானியம் வழங்கப்படும்.

அனைத்து வீடுகளுக்குமான 100 யூனிட் இலவச மின்சாரம் ரத்து என்ற தகவல் வதந்திதான். இவ்வாறு அதில் விளக்கமளிக்கப்பட்டது. இதன்மூலம் வாடகைக்கு இருப்பவர்களுக்கு மானியம் ரத்து ஆகாது என உறுதியாகியுள்ளது.

  • Ajith exits Neeruku Ner விஜய் படத்திற்கு NO சொன்ன அஜித்..அடுத்தடுத்து விலகிய பிரபலங்கள்..!
  • Views: - 309

    0

    0