100 யூனிட் இலவச மின்திட்டமும் முடங்கப் போகுது? அதிமுக எம்எல்ஏ பொள்ளாச்சி ஜெயராம் தகவல்!!
Author: Udayachandran RadhaKrishnan7 மார்ச் 2023, 9:26 மணி
திருப்பூர் மாநகர மாவட்ட அதிமுக அலுவலகத்தில் வட மாநில தொழிலாளர்களுடனான ஆலோசனைக் கூட்டம் முன்னாள் துணை சபாநாயகரும், திருப்பூர் மாநகர மாவட்ட கழக செயலாளருமான பொள்ளாச்சி.V.ஜெயராமன் தலைமையில் நடைபெற்றது.
இதையடுத்து பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேசியவர்
புலம்பெயர் தொழிலாளர்கள் அச்சமின்றி பணியாற்ற வேண்டும். அவர்களுக்கு அதிமுக எப்பொழுதும் துணை நிற்கும்.
மத்திய மாநில அரசுகள் இன்னும் தீவிரமாக செயல்பட்டு தொழிலாளர்கள் மத்தியில் அச்சமில்லா சூழலை உருவாக்க வேண்டும். யார் இதை செய்தாலும் தமிழகத்தின் பொருளாதாரம் பாதிக்கப்படும்.
அதி்முகவின் 10 ஆண்டு கால ஆட்சியில் தொழில் வளர்ச்சி அடைந்துள்ளது. கொரோனா விற்க்கு பிறகு தற்போது தான் மீட்டு வருகின்றனர். தற்போது இது போன்ற வதந்தி பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். இதனை யார் செய்தாலும் வன்மையாக கண்டிக்கத்தக்கது.
இந்தியாவிற்கு வேலை தரும் மாநிலமாக தமிழகம் மாறி உள்ளது என்றால் அது 10 ஆண்டு அதிமுக ஆட்சி காரணம். தேர்தலில் வெற்றி தோல்வி சாதாரணமான ஒன்று தான். ஆர் கே நகர் தேர்தலில் திமுக டெபாசிட் இழந்துள்ளது, எடப்பாடியார் தான் அதிமுகவின் நிரந்தர பொதுச்செயலாளர்.
அம்மா கொண்டு வந்த பல திட்டங்கள் கைவிடப்பட்டது. இந்த அரசு 100 யூனிட் இலவச மின் திட்டத்தை கைவிட தான் ஆதார் இணைப்பு என கூறி வருகின்றனர்.
வாடகைக்கு இருப்பவர்களுக்கு மின் கட்டண சலுகை கிடைக்காது. போக போக அதுவும் நிறுத்தப்படும், மின் கட்டண உயர்வு, வீட்டு வரி உயர்வு, சொத்து வரி உயர்வால் வீடு வாடகைக்கு இருப்பவர்கள் மிகவும் சரமப்படுகிறார்கள் என தெரிவித்தார்.
இந்த கூட்டத்தில் அதிமுக திருப்பூர் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் விஜயகுமார், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் குணசேகரன் உட்பட அதிமுக நிர்வாகிகள் வட இந்தியா சங்க நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்றனர்
0
0