மின் இணைப்புடன் ஆதாரை இணைக்காவிட்டால் 100 யூனிட் இலவச மின்சாரம் ரத்தா…? அமைச்சர் செந்தில்பாலாஜி வெளியிட்ட முக்கிய தகவல்
Author: Babu Lakshmanan18 November 2022, 5:37 pm
மின் நுகர்வோர் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்காவிட்டால் 100 யூனிட் இலவச மின்சாரம் ரத்து செய்யப்படுமா..? என்பது குறித்து அமைச்சர் செந்தில்பாலாஜி விளக்கியுள்ளார்.
தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை அண்ணா சாலையில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது, அவர் பேசியதாவது :- மின் நுகர்வோர் மின் இணைப்புடன் ஆதாரை எண்ணை இணைத்தால் தான் 100 யூனிட் மின்சாரம் வழங்கப்படும் என பரவி வரும் தகவல் தவறானது. ஒருவர் 3 அல்லது 5 இணைப்புகள் வைத்திருந்தாலும், அவர்கள் ஆதார் எண்ணுடன் இணைக்கின்ற போதும் மானியம் நிறுத்தப்படாது.
மின் இணைப்போடு ஆதார் இணைப்பது குறித்து நுகர்வோருக்கு குறுஞ்செய்தி அனுப்பப்படும். மின் நுகர்வோர் மின் இணைப்புடன் ஆதாரை எண்ணை இணைத்தால் தான் 100 யூனிட் மின்சாரம் வழங்கப்படும் என பரவி வரும் தகவல் தவறானது. ஒருவர் 3 அல்லது 5 இணைப்புகள் வைத்திருந்தாலும் அவர்கள் ஆதார் எண்ணுடன் இணைக்கின்ற போதும் மானியம் நிறுத்தப்படாது. மின் இணைப்போடு ஆதார் இணைப்பது குறித்து நுகர்வோருக்கு குறுஞ்செய்தி அனுப்பப்படும், எனக் கூறினார்.