முதலமைச்சர் ஸ்டாலின் அலுவலகத்தை முற்றுகையிட்ட 1000 பேர் : திடீர் பரபரப்பு.. போராட்டத்தால் போலீஸ் குவிப்பு!!!

Author: Udayachandran RadhaKrishnan
20 September 2023, 12:58 pm

முதலமைச்சர் ஸ்டாலின் அலுவலகத்தை முற்றுகையிட்ட 1000 பேர் : திடீர் பரபரப்பு.. போராட்டத்தால் போலீஸ் குவிப்பு!!!

தமிழக மின்வாரியத்தின் கீழ் தற்காலிக பணியான கேங்மேன் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டு தேர்வுகள் முடிக்கப்பட்டன. இதில் 15000 காலிப்பணியிடங்கள் இருப்பதாக அறிவிக்கப்பட்டதாக தெரிகிறது. இந்த வேலைக்கு இதுவரை 9,600 பேர் பணியமர்த்தப்பட்டுள்ளனர் என்று கூறப்படுகிறது.

இதில் பணியமர்த்தப்படாதவர்கள் இன்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் சொந்த தொகுதியான சென்னை, கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் , முதல்வர் அலுவலகம் முன்பு திடீரென போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஒரே நேரத்தில் 1000க்கும் மேற்பட்டோர் அங்கு குவிந்து போராட்டத்தில் ஈடுபட்டுவ வருவதால் அங்கு பெரும் பரபரப்பு உண்டாகியுள்ளது.

கேங்மேன் பணியிடங்களுக்கு ஆட்கள் நிரப்பப்பட்டதில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக கூறியும், எந்த அடிப்படையில் அவர்கள் பணியமர்த்தப்பட்டார்கள் என்றும் மின்வாரிய ஊழியர்கள் வெளிப்படியாக கூற வேண்டும். இதில் முதல்வர் நேரடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என போராட்டக்காரர்கள் கூறுகின்றனர்.

இதனால் கொளத்தூர் முதல்வர் அலுவலகம் முன்பு நூற்றுக்கணக்கான போலீசார் விரைந்து வந்து போராட்டக்காரர்களை கட்டுப்படுத்தி வருகின்றனர். இது தொடர்பாக மின்வாரிய ஊழியர்கள் கூறுகையில், விதிமுறைகள் அடிப்படையில் தான் தகுதியான நபர்கள் கேங்மேன் பணிக்கு பணியமர்த்தப்பட்டனர் என்று குறிப்பிட்டுள்ளனர்.

  • Director Ram movies ஒரு படத்தில் 23 பாடல்களா…இயக்குனர் ராம் செதுக்கிய அற்புதமான படம்..சர்வேதச விழாவிற்கு தேர்வு..!