65 வயது முதியவருக்கு 103 ஆண்டு சிறை… கொண்டாடும் மக்கள்.. என்ன காரணம்?!
Author: Udayachandran RadhaKrishnan28 January 2025, 1:29 pm
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி தலையாமங்கலம் 48 வடபாதி கம்பர் தெருவை சேர்ந்த சதாசிவம் (வயது 65).கடந்த 2019 ஆண்டு இவர் 12 வயது சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இது பற்றி அறிந்த சிறுமியின் பெற்றோர் தலையாமங்கலம் போலீசில் புகார் கொடுத்தனர் அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சதாசிவத்தை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதையும் படியுங்க: வாந்தி எடுத்த சீமான்.. அடுத்த 4 நாட்களில்.. ஆனால் ‘அது’ இல்லை.. கரு.அண்ணாமலை பரபரப்பு பேட்டி!
இந்த வழக்கில் சம்மந்தப்பட்ட சதாசிவத்தை அறிவியல் பூர்வமான ஆய்விற்கு உட்படுத்த்தி சான்றுகள் பெற்று உரிய சாட்சிகளை விசாரணை செய்து போலீசார் திருவாரூர் மகிளா நீதிமன்றத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கு விசாரணையில் இருந்த நிலையில் சதாசிவம் நீதிமன்றத்தில் ஆஜராகாததால் அவர் மீது பிடிக்கட்டளை பிறப்பித்து போலீசார் சதாசிவத்தை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நாகை சிறையில் அடைத்தனர்.
இதனையடுத்து திருவாரூர் மகிளா நீதிமன்றத்தில் வழக்கு இறுதி விசாரணையில் சதாசிவத்தை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். விசாரணை முடிவில் மகிளா நீதிபதி சரத்ராஜ் இன்று தீர்ப்பு அளித்தார்.
இந்த தீர்ப்பில் குற்றம் நிருபிக்கப்பட்டதால் சதாசிவத்திற்கு 103 ஆண்டுகள் ஏககாலத்தில் சிறைதண்டனையும்,19 ஆயிரம் ரூபாய் அபாரதமும் விதித்து உத்தரவிட்டார்.
மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தீருதவி தொகையாக ரூ.7 லட்சம் அரசு வழங்கிட வேண்டும் எனவும் அதில் குறிப்பிட்டுள்ளார்