இதுதான் ஜனநாயக கடமை… தள்ளாடும் வயதிலும் வாக்களித்த 105 வயது மூதாட்டி
Author: kavin kumar19 February 2022, 8:33 pm
திண்டுக்கல் : திண்டுக்கல்லில் 105 வயது மூதாட்டி தள்ளாடும் வயதிலும் தனது ஜனநாயக கடமையான வாக்கு பதிவை பதிவு செய்தார்.
தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் இன்று நடைபெற்ற நிலையில் திண்டுக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட 48 வார்டுகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது.இந்நிலையில் மாநகராட்சிக்கு உட்பட்ட ஒன்பதாவது வார்டு பகுதியில் 102 வயது மூதாட்டி தனத்தம்மாள் தனது ஜனநாயக கடமையான வாக்குப்பதிவை பதிவு செய்தார்.
அதை தொடர்ந்து அவரை விட வயது முதிர்ந்த, 105 வயதான ஆரோக்கியம்மாள் என்ற மூதாட்டி தனது தள்ளாத வயதிலும் தன்னால் நடக்க முடியாத சூழ்நிலையிலும் தனது உறவினர்கள் ஆதரவுடன் சக்கர நாற்காலியில் வந்து 45வது வார்டுக்கு உற்பட்ட பிலோமினாள் பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் தனது ஜனநாயக கடமையான வாக்குப்பதிவை பதிவு செய்தார்.
தற்போது இளம் வயது வாக்காளர்கள் கூட தனது ஜனநாயக கடமையான வாக்குப்பதிவை செய்யாமல் இருக்கும் நிலையில், தள்ளாத வயதிலும் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 100 வயதுக்கு மேலான வயது முதிர்ந்தவர்கள் வாக்கு பதிவு செய்தது அனைவரின் மத்தியிலும் ஆச்சரியத்தையும் நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியது.
0
0