108 ஆம்புலன்சை வழிமறித்து ரகளை.. உச்சி வெயிலில் போதையின் உச்சியில் தள்ளாடிய இளைஞர்!!
Author: Udayachandran RadhaKrishnan22 April 2023, 1:52 pm
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் பேருந்து நிலையம் முன்பாக நிற்க்க முடியாத அளவிற்க்கு உச்ச போதையில் இளைஞர் ஒருவர் தள்ளாடி தள்ளாடி சாலையை அளந்து கொண்டு 108 ஆம்புலன்ஸ் மற்றும் பேருந்துகள் நூற்பாலை வாகனங்கள் இருசக்கர வாகனங்களை தடுத்து நிறுத்தி கலாட்டாவில் ஈடுபட்டதுடன் நடந்து செல்லும் பெண்கள் இளைஞர்களிடமும் தகராறில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.
அனைவரும் வேடிக்கை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்த நிலையில் இளைஞர் பேருந்து நிலையத்திற்குள் சென்று கலாட்டாவில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.
இளைஞர்கள் அனைவரும் அமைதியாக இருந்த நிலையில் முதியவர் ஒருவர் மட்டும் தைரியமாக குடி போதையில் கலாட்டாவில் ஈடுபட்ட இளைஞரை துணிந்து பிடித்து கொண்டு வந்து போலீசாரிடம் ஒப்படைத்தபின்பு வேடிக்கையாளர்களான பொதுமக்கள் மொத்தமாக சூழ்ந்து கொண்டனர்.
பின்பு போலீசாரின் இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்த இளைஞர் வாகனம் செல்லும் பொழுது பின்னால் திரும்பி டேய் என்று சவுண்ட் விட, இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் கண்மூடித்தனமாக போலீசாரின் பின்னால் அமர்ந்திருந்த இளைஞரை சரமாரியாக தாக்கினர்.
இதில் இளைஞருக்கு அடிபட்டது மட்டுமல்லாமல் போலீக்கும் ஒரு சில அடியும் விழுந்தது. ஒருவழியாக போராடி கூட்டத்திலிருந்து இருந்து இளைஞரை காப்பாற்றிய காவலர் சுரேஷ்குமார் போலீஸ் நிலையம் கொண்டு சென்றார்.
போலீசார் விசாரணையில் ராஜா வயது 19 தாராபுரத்தில் வேலை செய்து வருவதும் விடுமுறைக்காக ஊருக்கு வந்துள்ளதும் தெரியவந்தது. போதையில் இருப்பதால் ராஜாவை எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
கோடை காலத்தில் சுட்டெரிக்கும் வெயிலில் குடி போதை இளைஞர்களின் அட்டூழியத்தால் வாகனஓட்டிகள் மற்றும் பொதுமக்களும் அவதிக்குள்ளாகினர்.