10ஆம் வகுப்பு சிறுமி பாலியல் வன்கொடுமை : கர்ப்பமாக்கிய திமுக பிரமுகரின் மகன் கைது… நெல்லை அருகே அதிர்ச்சி சம்பவம்!!
Author: Udayachandran RadhaKrishnan21 May 2022, 4:53 pm
நெல்லை : சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த திமுக ஊராட்சி மன்ற தலைவர் மகனை போலீசார் கைது செய்தனர்.
நெல்லை மாவட்டம் இளையநயினார்குளத்தை சேர்ந்தவர் முருகேசன். திமுகவை சேர்ந்த இவர் சவுந்திரபாண்டியபுரம் ஊராட்சி மன்ற தலைவராக உள்ளார்.
இவரது மகன் வெங்கடேஷ். இந்நிலையில் வெங்கடேஷ் குட்டம் பகுதியை சேர்ந்த 10ம் வகுப்பு படிக்கும் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து கர்ப்பமாக்கியதாக கூறப்படுகிறது.
இதில் பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் வள்ளியூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் வெங்கடேஷ் மீது புகார் அளித்தார்.
புகாரின்பேரில் திமுக ஊராட்சி மன்ற தலைவர் மகன் வெங்கடேஷை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழகத்தில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றச்சம்பவங்கள் நடைபெற்று வரும் நிலையில் ஆளுங்கட்சியின் பிரமுகர், ஊராட்சி மன்ற தலைவரின் மகன் ஒருவர் பாலியல் குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.