கடலூர் : 10 வகுப்பு மாணவனால் கர்ப்பம் தரித்த 11ம் வகுப்பு மாணவி, குழந்தை பெற்றெடுத்து புதரில் வீசிய கொடுரம் அரங்கேறியுள்ளது.
கடலூர் – புவனகிரியில் உள்ள அரசு பள்ளியில் 500க்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்று வரும் நிலையில், அப்பள்ளியின் கழிவறையில் பிறந்து சில மணி நேரங்களே ஆன ஆண் குழந்தை ஒன்று தொப்புள் கொடியுடன் இறந்து கிடப்பதை கண்டு மாணவிகள் அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து ஆசிரியர் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டு பின்னர், போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
போலீசார் சம்பவ இடத்திற்கு ஆய்வு செய்து குழந்தையின் உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் மாணவியரிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. அதன்படி அந்தப் பள்ளியில் 11ஆம் வகுப்பு படிக்கும் மாணவியின் ஊரை சார்ந்த பத்தாம் வகுப்பு பயிலும் மாணவர் ஒருவர் தான் மாணவியின் கர்பத்திற்கு காரணம் என்று விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும் காவல்துறையினர் மாணவியை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் மாணவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர் பதினோராம் வகுப்பு படிக்கும் மாணவியை கர்ப்பம் ஆகியதும் மாணவி கழிவறையிலேயே குழந்தை பெற்றெடுத்து புதரில் வீசி சென்று சம்பவம் புவனகிரியில் பொரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அட்டர் பிளாப் பாலிவுட்டில் ஏ.ஆர்.முருகதாஸ் சல்மான் கானை வைத்து இயக்கிய திரைப்படம் “சிகந்தர்”. இதில் சல்மான் கானுக்கு ஜோடியாக ராஷ்மிகா…
5 கோடி இழப்பீடு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
பாரதிய ஜனதா கட்சியின் சிறுபான்மை அணி தேசிய செயலாளர் வேலூர் இப்ராகிம் திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் நடைபெறும் வக்பு திருத்தச்…
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் காந்தி கலையரங்கத்தில் சட்ட மாமேதை அம்பேத்கரின் பிறந்த நாள் விழா, வக்ஃபு வாரிய சட்ட திருத்தம்…
வைகைப்புயல் மீது பிராது வைகைப்புயல் என்று அழைக்கப்படும் காமெடி நடிகர் வடிவேலு கோலிவுட்டின் டாப் காமெடி நடிகராக வலம் வந்த…
This website uses cookies.