குறைந்த மதிப்பெண் எடுத்த 10ஆம் வகுப்பு மாணவர் தற்கொலை முயற்சி : அரசு மருத்துவமனையில் மாணவனுக்கு அறிவுரை கூறிய ஆட்சியர்!

Author: Udayachandran RadhaKrishnan
26 May 2023, 3:11 pm

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அரசு மருத்துவமனையில் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அரசு மருத்துவமனையின் நிலவரம் குறித்து தெரிந்து கொள்வதற்காக அரசு மருத்துவமனைக்கு ஆய்வுக்கு வந்தார்.

அப்போது சிறப்பு சிகிச்சை பிரிவு, பொது மருத்துவம், சித்த மருத்துவம், ஸ்கேன், எக்ஸ்ரே, டயாலிசிஸ் இயந்திரம் போன்ற பல்வேறு கருவிகள் உள்ளனவா, முறையாக செயல்படுகின்றனவா என்றும் ஆய்வு மேற்கொண்டார்.

இப்பகுதியில் வரும் பொதுமக்கள் அரசு மருத்துவமனையில் எவ்வாறு பயன்படுத்துகிறார்கள் என்பதை கேட்டு அறிந்து கொண்டார் பொதுமக்கள் சார்பாக மாவட்ட ஆட்சியரிடம் பல்வேறு புகார்கள் அளிக்கப்பட்டன. புகார் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.

குறிப்பாக குடிநீர் வசதி,கழிப்பிட வசதி இல்லை என பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். முறையாக நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

தீவிர சிகிச்சை பிரிவில் 10ம் வகுபு பொது தேர்வில் குறைவாக மதிப்பெண் எடுத்ததால் தற்கொலைக்கு முயற்சி செய்த அண்ணா நகரை சேர்ந்த அணீஷ் என்ற மாணவரை நேரில் பார்த்து ஆறுதல் சொன்னார்.

மதிப்பெண் குறைவாக எடுத்தால் எந்த விதமான பிரச்சினையும் இல்லை, வாழ்க்கையில் முன்னேற தொடர்ந்து உழைக்க வேண்டும், 10ம் வகுப்பில் நானும் குறைவான மதிப்பெண் தான் எடுத்தேன்,ஆனால் இப்பொழுது நான் மாவட்ட ஆட்சியர்,அதனால் முயற்சியை கை விடாதே என மாணவருக்கு ஆறுதல் கூறினார்.

  • Ajith exits Neeruku Ner விஜய் படத்திற்கு NO சொன்ன அஜித்..அடுத்தடுத்து விலகிய பிரபலங்கள்..!
  • Views: - 432

    0

    0