புதுக்கோட்டை அருகே பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவி காலாண்டு தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்த விரக்தியில் தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் காவல் சரகத்திற்குட்பட்ட ஆதித்தன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த முருகேசன் என்பவரின் மகள் அனுஸ்ரீ (14). இவர் மேலபட்டு அருகில் உள்ள பிள்ளைகள் அரசு உயர்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். இவர் தற்போது நடந்த காலாண்டு தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்திருப்பதாக, அவரது அண்ணனும் தாயாரும் திட்டுவார்கள் என்ற பயத்துடன் இருந்து வந்துள்ளார்.
இந்த நிலையில், இரவு யாரும் இல்லாத நேரத்தில் சேலையால் அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதை பார்த்து அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து அவரைப் பார்த்தபோது, அவர் ஏற்கனவே இறந்து விட்டதாகவும் அக்கம்பக்கத்தினர் கூறினர். அந்த மாணவி தன் கைப்பட கடிதம் ஒன்று எழுதி வைத்துள்ளார்.
அதில், ‘என் தந்தை சென்ற இடத்திற்கே நானும் செல்கிறேன். நான் காலாண்டு தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றுள்ளேன். அதனால் என் அண்ணனும் என் அம்மாவும் என்னை திட்டுவார்கள். அதனால் தான் இந்த முடிவு,’ என்று எழுதி வைத்துள்ளார். இது குறித்து ஆவுடையார் கோவில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை செய்து வருகின்றனர்.
ஒருநாள் கிரிக்கெட்டில் தொடர்ந்து அதிக போட்டிகளில் ஒரு முறைகூட டாஸ் வெல்லாத கேப்டன் என்ற பிரைன் லாராவின் மோசமான உலக…
ராஜ்ய சபா சீட் பெறுவது தொடர்பாக அதிமுக உடன் எந்த வருத்தமும் இல்லை என தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா…
சுந்தர் சி - குஷ்பூ தம்பதியின் 25வது திருமண நாளை முன்னிட்டு பழனி முருகன் கோயிலில் குடும்பத்துடன் சாமி தரிசனம்…
அதிமுகவின் சாதனைகளை மக்களிடத்தில் கொண்டு சேர்க்கும் திண்ணைப் பிரச்சாரத்தை தீவிரப்படுத்த வேண்டும் என இபிஎஸ் அறிவுறுத்தியுள்ளார். சென்னை: அதிமுக மாவட்ட…
கடலூர் அருகே திருடச் சென்றபோது ஒருவர் உயிரிழந்ததற்கு காரணமாக இருந்ததாக அவரது நண்பர்கள் மூவர் உள்பட 4 பேர் கைது…
இந்தியா - நியூசிலாந்து சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டிக்குப் பிறகு ரோகித் சர்மா, விராட் கோலி மற்றும் கேன் வில்லியம்சன்…
This website uses cookies.