10ம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வி… விரக்தியடைந்த மாணவன் தூக்குபோட்டு தற்கொலை.. கரூரில் அதிர்ச்சி சம்பவம்!!
Author: Babu Lakshmanan19 May 2023, 3:50 pm
கரூரில் பத்தாம் வகுப்பில் தோல்வி அடைந்ததால் மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அருகே சின்னமலபட்டி பகுதியைச் சேர்ந்த வீராச்சாமி மகன் சிவா, பழைய ஜெயங்கொண்டம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதி இருந்தார்.

இந்நிலையில் இன்று தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டதில் பத்தாம் வகுப்பில் மாணவன் தோல்வியடைந்திருந்தார். இதனால் ஏற்பட்ட துக்கத்தில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து தகவல் அறிந்து மாயனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உயிரிழந்த மாணவனின் உடலை கைப்பற்றி கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.