உடல்நலம் பாதித்து படுத்த படுக்கையான 10ம் வகுப்பு மாணவி… தந்தை கைகளால் சுமந்து சென்று தேர்வு எழுதிய நெகிழ்ச்சி சம்பவம்
Author: Babu Lakshmanan18 May 2022, 11:17 pm
10 ம் வகுப்பு தேர்வில் முதல் பரீட்சைக்கு நடந்து சென்று தேர்வு எழுதிய பள்ளி மாணவி இரண்டாவது தேர்வுக்கு தந்தை கைகளால் சுமந்து சென்ற காட்சி அனைவரையும் கண்கலங்க வைத்தது.
கரூர் அருகே சுங்ககேட் பகுதியை சார்ந்தவர் சுரேஷ் (36), இவரது மனைவி கவிதா. இத்தம்பதியினருக்கு இரண்டு மகள்கள் உள்ள நிலையில், வாடகை வீட்டில் வசித்து வருகிறார். தனியார் பஸ்பாட்டி கம்பெனியில் நாள் கூலி வேலை செய்து வரும் இவருக்கு பெரிய மகள் 11வது படித்து வருகின்றார். இளைய மகள் 10ம் வகுப்பு படித்து வருகின்றார். கரூரில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் 10 ம் வகுப்பு படித்து வரும் இவருக்கு கடும் காய்ச்சல் ஒருமாத காலமாக இருந்த நிலையில், அதற்கு கரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
மேலும், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த 6ம் தேதி தொடங்கியுள்ள நிலையில், முதல் தேர்வுக்கு இவர் அங்கு நடந்து சென்று தேர்வு எழழுதினார். இந்த நிலையில், 2வது தேர்வான ஆங்கிலம் தேர்வை தந்தை உதவியுடன், அவரது தந்தை அந்த மாணவியை இரண்டு கைகளால் தூக்கி கொண்டு பள்ளிக்கு வந்த காட்சி அனைவரையும் கண்கலங்க வைத்துள்ளது.
காரணம், அந்த மாணவிக்கு மீண்டும் காய்ச்சல் வந்த நிலையில், அவருக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தும், மேல் சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர், இடது காலில் ஒருவிதமான வலி மற்றும் உணர்ச்சியற்ற தன்மையுடன் கூடிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், தனது படிப்பு பாதியில் நின்று விடக்கூடாது என்று கடும் வலியுடன் தேர்விற்காக படித்த அந்த பள்ளி மாணவி, இன்று இரண்டாம் தேர்வான ஆங்கிலத்தை எழுத கால்கள் முடியாமல், தன் தந்தை உதவியுடன் தந்தை இரு கைகளால் தூக்கி கொண்டு பள்ளிக்கு வந்துள்ளார்.
மேலும் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் எண்ணற்ற சிகிச்சைகள் கொடுக்கப்பட்டும் இது என்ன விதமான நோய் என்பதனை கண்டறிந்து இனி வரும் காலத்தில் அது போன்ற நோய்களுக்கு மருந்து கண்டுபிடிக்க வேண்டுமென்பது மக்களின் கோரிக்கையாகும்.