பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை… தனியார் பள்ளியின் முதல்வர் போக்சோவில் கைது செய்து சிறையில் அடைப்பு

Author: Babu Lakshmanan
18 January 2024, 2:33 pm

விழுப்புரம் அருகே பத்தாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த தனியார் பள்ளியின் முதல்வர் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள ரெட்டனை கிராமத்தில் கிரீன் பாரடைஸ் என்ற தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் பயிலும் பத்தாம் வகுப்பு மாணவிகளுக்கு அப்பள்ளியின் முதல்வர் கார்த்திகேயன் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக பெற்றோரிடம் சிறுமி தெரிவித்துள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் விழுப்புரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கடந்த 14 ஆம் தேதி புகார் அளித்தனர். அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை செய்ததில், பள்ளியின் முதல்வர் கார்த்திகேயன் பாலியல் சீண்டலில் ஈடுபட்டது உறுதியானது.

பின்னர், பள்ளியின் முதல்வர் கார்த்திகேயன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். போக்சோ வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதால் பள்ளியின் முதல்வர் கார்த்திகேயன் தலைமறைவாகிய நிலையில், நேற்றைய தினம் அவரை போலீசார் கைது செய்தனர்.

இந்நிலையில் கைது செய்யப்பட்ட கார்த்திகேயனை விழுப்புரம் போக்சோ நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தியதை தொடர்ந்து, நீதிபதி ஹெர்மிஸ் வருகின்ற 1.02.2024 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவிட்டார்.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி