ஊட்டியில் 10ஆம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த 4 பேரைக் கைது செய்துள்ள போலீசார், 3 பேரை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
நீலகிரி: நீலகிரி மாவட்டம், உதகமண்டலத்தில் கூலித் தொழிலாளி தம்பதியின் 16 வயது மகள் 10ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவர்கள், வெளி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். கடும் வறுமையில், பெற்றோர் இருவரின் ஊதியத்தில் குடும்பம் நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், தொட்டபெட்டா சந்தையில் வேலை பார்த்து வரும் ஹரீஷ் என்ற இளைஞர் உடன் சிறுமி பழகி வந்து உள்ளார். ஆனால், இருவர் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக, சிறுமி இளைஞர் உடன் பழகுவதை நிறுத்தி உள்ளார். இந்த நிலையில், கடந்த நவம்பர் 10ஆம் தேதி, நண்பர்களைப் பார்க்கச் செல்வதாக கூறிவிட்டு சிறுமி சென்று உள்ளார்.
பின்னர், நவம்பர் 13ஆம் தேதி வீடு திரும்பிய சிறுமி மிகவும் சோர்வுடன் காணப்பட்டு உள்ளார். அப்போது, அவரிடம் தாய் விசாரிக்கையில், முகநூல் (Facebook) மூலம் அறிமுகமான நண்பர் ஒருவர், அவரது வீட்டிற்கு சிறுமியை அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக பெற்றோரிடம் கூறி இருக்கிறார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர், இது குறித்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளனர். இதன் பேரில் மாணவியிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி உள்ளனர். அதில், சிறுமியின் வறுமை நிலையைப் பயன்படுத்தி, மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த காஜா, ஊட்டியைச் சேர்ந்த ஹரிஷ், இடுஹட்டியைச் சேர்ந்த பிரவீன் (19), பெந்தட்டியைச் சேர்ந்த பிரேம்குமார் (24) மற்றும் அஜீத் உள்பட 7 பேர் சிறுமியை வெவ்வேறு காலங்களில் பாலியல் வன்கொடுமை செய்து உள்ளனர்.
இதையும் படிங்க: ’பெத்த அப்பன்தானே விட்ரலாமா..’ தாய் கதறிச் சொன்ன ‘அந்த’ வார்த்தை.. போலீசார் அலட்சியமா?
இதனையடுத்து, 7 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்து உள்ள போலீசார், ஹரீஷ், பிரேம்குமார், அஜித் உள்ளிட்ட 4 பேரை கைது செய்து உள்ளனர். மேலும், தலைமறைவான 3 பேரை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். இந்தச் சம்பவம் ஊட்டி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் தனது சினிமா அறிமுகத்திலேயே அவர் வாங்கி இருக்கும் சம்பளம் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி உள்ளது.தெலுங்கு…
அதிமுக உடனான கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும், சரியான நேரம் வரும்போது, அதை தெரியப்படுத்துவோம் என்றும் அமித்ஷா கூறியுள்ளார்.…
தூத்துக்குடி அருகே காதலை கைவிட்டுச் சென்ற இளம்பெண்ணை தீக்கிரையாக்கி கொன்ற இளைஞர் உள்பட இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி:…
தோனி களமிறங்குவாரா? ரசிகர்கள் எதிர்பார்ப்பு.! ஐபிஎல் 2025 சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள்…
தங்கள் கட்சியை வளர்ப்பதற்காகவும், தொண்டர்களை உற்சாகப்படுத்துவதற்காகவும் விஜய் அவ்வாறு கூறியுள்ளதாக இபிஎஸ் தெரிவித்துள்ளார். சேலம்: சேலத்தில் இன்று அதிமுக சார்பாக…
பாலிவுட் நடிகை ஷாக் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் "சிறகடிக்க ஆசை" தொடரில் வித்யா எனும் கதாபாத்திரத்தின் தோழியாக நடித்து…
This website uses cookies.