பாழடைந்த கட்டிடம்.. பேச்சு கொடுத்த இளைஞர்.. 10-ம் வகுப்பு மாணவிக்கு நேர்ந்த கொடுமை!

Author: Hariharasudhan
23 December 2024, 12:46 pm

குமரி மாவட்டத்தில், 10ஆம் வகுப்பு மாணவி தனது இன்ஸ்டாகிராம் தோழருடன் நெருங்கி இருந்ததில் கர்ப்பமானது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கன்னியாகுமரி: குமரி மாவட்டம், குளச்சல் அருகே உள்ள ஒரு பகுதியைச் சேர்ந்தவர் ஜெர்வின் (21). இவருக்கும், அருகில் உள்ள பகுதியில் வசித்து வரும் 14 வயது சிறுமிக்கும் இன்ஸ்டாகிராம் செயலி மூலம் பழக்கம் ஏற்பட்டு உள்ளது. இவர் அரசுப் பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்த நிலையில், இந்தப் பழக்கம் நாளடைவில் காதலாக மாறி உள்ளது. இதனையடுத்து, பள்ளிக்குச் சென்று வரும்போது இரண்டு பேரும் பேசி வந்து உள்ளனர். இந்த நிலையில், சிறுமியை கடந்த செப்டம்பர் மாதம் தனது அந்த இளைஞர் தனது கிராமத்துக்கு அழைத்து வந்து உள்ளார்.

பின்னர், அங்கு உள்ள பாழடைந்த கட்டிடம் ஒன்றிற்கு சிறுமியை அழைத்துச் சென்று உள்ளார். அங்கு வைத்து பேச்சு கொடுத்த இளைஞர், உன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி உள்ளார். இதனையடுத்து, சிறுமியுடன் உடலுறவு கொண்டு உள்ளார். பின்னர், இதுபோன்று பலமுறை நடந்து உள்ளதாகத் தெரிகிறது.

10th std girl pregnant in Kanyakumari police searching her Instagram lover

இந்த நிலையில், கடந்த சில நாட்களாக சிறுமிக்கு வயிற்று வலி ஏற்பட்டு உள்ளது. எனவே, சிறுமியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று உள்ளனர். அப்போது, சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரிய வந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த தாய், இது குறித்து சிறுமியிடம் விசாரித்து உள்ளார்.

இதையும் படிங்க: அரியலூரில் இறங்கிய தவெக கொடி.. புஸ்ஸி ஆனந்தால் உட்கட்சி பூசலா? பகீர் காரணம்!

அப்போது, நடந்த விஷயங்களை சிறுமி கூறியுள்ளார். இதனையடுத்து, குளச்சல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இதுகுறித்து புகார் அளிக்கப்பட்டு உள்ளது. இதன்படி, போக்சோ பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீசார், தலைமறைவான இளைஞரை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

  • முதல்ல பம்முறாங்க அப்றம் சட்டம் பேசுறாங்க..வேதனையில் ஃபயர் பட இயக்குனர்.!