9ஆம் வகுப்பு மாணவியின் குழந்தைக்கு தந்தையான 10ஆம் வகுப்பு மாணவன்.. தஞ்சையில் பகீர் சம்பவம்!

Author: Hariharasudhan
27 November 2024, 11:54 am

தஞ்சையில் 9ஆம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய 10ஆம் வகுப்பு மாணவன் சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைக்கப்பட்டு உள்ளார்.

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ராசாமிராசுதார் அரசு மருத்துவமனைக்கு சிறுமி ஒருவர், வயிற்று வலி பிரச்னை எனக் கூறி சிகிச்சைக்காக வந்து உள்ளார். 9ஆம் வகுப்பு மாணவியான இவரை மருத்துவர்கள் பரிசோதனை செய்து பார்த்தபோது, அவர் கர்ப்பமாக இருப்பதாகத் தெரிவித்து உள்ளனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர், பின்னர் சிறுமியை வீட்டுக்கு அழைத்துச் சென்று உள்ளனர். இந்த நிலையில், சிறுமிக்கு பெண் குழந்தை பிறந்து உள்ளது. பின்னர், இது தொடர்பாக சிறுமியிடம் பெற்றோர் விசாரித்து உள்ளனர். அதில், சிறுமி வசிக்கும் அதே பகுதியைச் சேர்ந்த 10ஆம் வகுப்பு மாணவனைக் காதலிப்பதாக கூறியுள்ளார்.

அது மட்டுமின்றி, பிறந்து உள்ள குழந்தைக்கு அந்த மாணவன் தான் காரணம் எனவும் சிறுமி பெற்றோரிடம் கூறி உள்ளார். இதனையடுத்து, இது குறித்து தஞ்சை, வல்லம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளனர். இதன் பேரில் போலீசார் விசாரணையைத் தொடங்கினர்.

இதையும் படிங்க: சபரிமலை 18 படியில் முதுகை காட்டிய போலீசார்.. மரபு மீறப்பட்டதா? கொதித்தெழும் பக்தர்கள்!

இந்த விசாரணையில், சிறுமி கைகாட்டிய 10ஆம் வகுப்பு மாணவனான 15 வயது சிறுவனை, போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். பின்னர், அவரை சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் சேர்த்தனர். இவ்வாறு 9ஆம் வகுப்பு மாணவியை 10ஆம் வகுப்பு மாணவன் கர்ப்பமாக்கி, சிறை சென்ற சம்பவம் தஞ்சையில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

  • Thaman viral interview கசப்பான முடிவை எடுத்த இசையமைப்பாளர் தமன்…அந்த பெண் தான் காரணமா..!