வீட்டின் வாளியில் நிரம்பியிருந்த தண்ணீரில் மூழ்கி 11 மாத குழந்தை மூச்சு திணறி பலி : அஜாக்கிரதையாக இருந்த தாயிடம் போலீசார் விசாரணை!!

Author: Udayachandran RadhaKrishnan
26 June 2022, 5:46 pm

திருப்பூர் : வாளியில் உள்ள நீரில் மூழ்கி 11 மாத குழந்தை பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் அடுத்த அனுப்பர்பாளையம் அருகே உள்ள அவிநாசி நகரில் வசித்து வருபவர்கள், பீகாரை சேர்ந்த புதன்மார்கோ (வயது 29). இவரது மனைவி சன்விகா தேவி (வயது 27). பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வருகின்றனர்.

இந்த தம்பதியின் 11 மாத குழந்தை தஞ்சன். இந்நிலையில் புதன்மார்கோ வேலைக்கு சென்றுவிட்டார். வீட்டில் சண்டிகா தேவியும், தஞ்சனும் இருந்தனர். இந்நிலையில் தஞ்சனை தூங்க வைத்த சன்விகா தேவி,அருகில் உள்ள வீட்டிற்கு சென்றார்.
அப்பொழுது தூக்கத்தில் இருந்து எழுந்த தஞ்சன், எதிர்பாராதவிதமாக வீட்டின் முன்பு இருந்த வாளியில் தலை குப்புற விழுந்தார். வாளியில் நீர் இருந்ததால் குழந்தையால் கூச்சலிட முடியவில்லை.

இதனை சில நேரம் கழித்து பார்த்த அக்கம்பக்கத்தினர், ஓடி வந்து குழந்தையை மீட்டனர். தொடர்ந்து குழந்தை அந்தப் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

ஆனால் அங்கு குழந்தையை பரிசோதித்த டாக்டர்கள் இறந்து விட்டதாக தெரிவித்தனர். சம்பவம் குறித்து அனுப்பர்பாளையம் போலீசார் தகவல் அளிக்கப்பட்டது.

அதன் பிறகு சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த சம்பவம் குறித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். வாளியில் உள்ள நீரில் மூழ்கி 11 மாத குழந்தை பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

  • Vijay And Trisha திரிஷாவை தவிர வேறு யார்? விஜய்யை சரமாரியாக விமர்சித்த பிரபல வாரிசு!