கோவில் திருவிழாவில் நாடகம் பார்த்த போது விபத்து : மின்சாரம் தாக்கி பரிதாபமாக பலியான 11 வயது சிறுவன்!!

Author: Udayachandran RadhaKrishnan
16 June 2022, 10:23 pm

புதுச்சேரி : கோவில் திருவிழாவில் மின்சாரம் தாக்கி பள்ளி மாணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

புதுச்சேரி முதலியார்பேட்டையை சேர்ந்தவர் நித்தியானந்தன், அவரது மகன் சித்து என்ற பிரணவ் (வயது 11). அங்குள்ள தனியார் பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருகின்றான், சுத்துகேனியில் உள்ள தனது தாத்தா வேலுச்சாமி வீட்டுக்கு சித்து சென்றுள்ளான்,

அங்கு நேற்று இரவு அம்மன் கோவில் திருவிழா நாடகம் நடைபெற்றது, அப்போது சாமியை ஊர்வலமாக எடுத்து செல்ல பயன்படுத்தப்படும் வண்டியில் அமர்ந்து சித்து உள்பட சிலர் நாடகம் பார்த்து கொண்டிருந்தனர்.

நள்ளிரவு நேரத்தில் வண்டியில் கட்டப்பட்டிருந்த மின்விளக்கில் (போகஸ் விளக்கு) இருந்து திடீரென மின்கசிவு ஏற்பட்டதை அடுத்து வண்டியில் அமர்ந்து இருந்தவர்களின் மீது மின்சாரம் தாக்கியதால் பலரும் எகிறி குதித்து ஓடினர்.

ஆனால் சித்துவால் ஓட முடியாததால் மின்சாரம் தாக்கியதில் மயங்கி விழுந்துள்ளான், உடனடியாக அக்கம்பக்கத்தினர் சித்துவை மீட்டு அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சித்து உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர் இது குறித்து காட்டேரிக்குப்பம் காவல் நிலையத்திற்கு அளித்த தகவலின் பேரில் தனியார் மருத்துவமனை வந்த போலீசார் மாணவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைகாக புதுச்சேரி கதிர்காமத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக அஜ்ஜாக்கிரதையாக இருந்த கோயில் நிர்வாகத்தினர் மற்றும் எலக்ட்டிஸியன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து போலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

11 வயது மாணவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சோகம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்ப்படுத்தி உள்ளது..

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 1264

    0

    0