11ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை… கணக்குப் பதிவியல் ஆசிரியர் செய்த சேட்டை ; போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு
Author: Babu Lakshmanan4 January 2024, 3:47 pm
புதுக்கோட்டை; புதுக்கோட்டையில் பிளஸ் 1 மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் கரும்பாக்கம் பகுதியை சேர்ந்த 36 வயது மனோகர் இவர் புதுக்கோட்டை நகரில் உள்ள அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியில் கணக்கு பதிவியல் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் அதே பள்ளியில் படிக்கும் 11ஆம் வகுப்பு மாணவிக்கு ஆசிரியர் மனோகரன் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து பெற்றோர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரின் பேரில் ஆசிரியர் மனோகர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்.