ஒருதலை காதலால் 11ஆம் மாணவிக்கு 14 இடங்களில் கத்திக்குத்து : தலைமறைவான இளைஞரை தேடிய போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

Author: Udayachandran RadhaKrishnan
1 June 2022, 12:57 pm

திருச்சி : மணப்பாறையில் பள்ளி மாணவியை கத்தியால் குத்துவிட்ட தப்பிய வாலிபர் ரயில் தண்டவாளத்தில் சடலமாக கண்டெடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம், மணப்பாறை அத்திகுளம் பகுதியை சேர்ந்த சுப்ரமணியன் என்பவரின் 16 வயது மகள் சுவேதா திண்டுக்கல் ரோட்டில் உள்ள அரசு உதவிபெறும் பெண்கள் மேல்நிலை பள்ளியில் 11 ம் வகுப்பு படித்து வருகிறார்.

தொடர்ந்து பள்ளியில் தேர்வு முடிந்து நடந்து சென்ற பள்ளி மாணவியை திருச்சி ரயில்ரோடு மேம்பாலம் பகுதியில் வாலிபர் ஒருவர் மாணவியின் கழுத்து உட்பட 10 இடங்களில் கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடியுள்ளார்.

ரத்த வெள்ளத்தில் ஆபத்தான நிலையில் மயங்கி விழுந்த பள்ளி மாணவியை சிகிக்கைகாக தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். தீவிர சிகிச்சை அளக்கப்பட்டு வருகிறது.

இச்சம்பவம் குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் கடந்த ஒரு ஆண்டிற்கு முன்பு பாதிக்கப்பட்ட பள்ளி  மாணவியை பொத்தமேட்டுப்பபட்டி பகுதியை சேர்ந்த  கேசவன் என்பவர் காதல் திருமணம் செய்து போக்சோவில் கைது செய்யபட்டதும், சில மாதங்களுக்கு முன்பு வெளியே வந்த வாலிபர் கேசவன் முன்விரோதம் காரணமாக மாணவியை கத்தியால் குத்தி கொலை செய்ய முயற்சி செய்ததும் தெரிய வந்தது.

தொடர்ந்து அந்த வாலிபரை காவல்துறையினர் தேடி வந்தனர். இந்நிலையில் நள்ளிரவில் கீழபூசாரிப்பட்டி இரயில்வே கேட் அருகில் சுமார் 500 மீட்டர் தொலைவில் இரயில் பாதையில் வாலிபர் ஒருவர் இரயிலில் அடிபட்டு உடல் சிதறி கிடப்பதாக இரயில்வே காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

தகவலின்பேரில் நிகழ்விடத்துக்கு சென்ற இரயில்வே காவல்துறையினர் உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டனர். அதில் சடலமாக உடல் சிதைந்த நிலையில் மீட்கப்பட்ட வாலிபரின் உடல் மணப்பாறை காவல்துறையினரால் +1 மாணவியை கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடி தேடப்பட்டு வந்த கேசவன் தான் என்பது தெரியவந்தது.

கேசவனின் தந்தை நிகழ்விடத்துக்கு வரவழைக்கப்பட்டு உறுதியும் செய்யப்பட்டது. அதனைத்தொடர்ந்து கேசவனின் உடலை கைப்பற்றிய இரயில்வே காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு பொது மருத்துவமனைக்கு இதனை அனுப்பி வைத்துள்ளார் தொடர்ந்து சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 886

    0

    0