புதுக்கோட்டையை சேர்ந்த 12 மீனவர்கள் கைது… 2 விசைப்படகுகளை சிறைபிடித்தது இலங்கை கடற்படை!!

Author: Udayachandran RadhaKrishnan
23 March 2023, 11:55 am

புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம் கோட்டைப்பட்டினம் ஆகிய துறைமுகங்களிலிருந்து நேற்று 255 விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.

இந்திய கடல் எல்லை பகுதியில் நெடுந்தீவு அருகே மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருக்கையில் அங்கே வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி, மாலதி, முருகானந்தம் ஆகியோருக்கு சொந்தமான 2 விசைப்படகுகள் மற்றும் அதில் சென்ற சிவக்குமார் (42), கலையரசன் (23), லோகேஸ்வரன் (24), சக்தி (25), பிரபு (35), சுந்தரமூர்த்தி (45), முருகானந்தம் (42), பாரதிதாசன் (35), ரவி (25), சசிகுமார் (40) விசாலிங்கம் (46), மயில்ராஜன் (23) உள்ளிட்ட 12 மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துச் சென்றுள்ளனர்.

சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் மயிலட்டி துறைமுகத்தில் வைத்து விசாரணை நடைபெற்று வருகிறது. இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்படுவதும், சிறைபிடிப்பதும் வாடிக்கையாகிவிட்ட நிலையில், இன்று இந்திய கடற்பரப்பில் மீன் பிடித்துக் கொண்டிருந்த 12 மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்ட சம்பவம் மீனவர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • Rajkumar Periyasamy Pan-India Film ஒரே படம் ஓஹோ-னு வாழ்க்கை…பாலிவுட்டில் களம் இறங்கிய அமரன் பட இயக்குனர்..!
  • Views: - 414

    0

    0