12 மணி நேர வேலையை சீரமைத்து அமல்படுத்த வேண்டும் : முதலமைச்சருக்கு கோரிக்கை வைத்த விக்கிரமராஜா!!

Author: Udayachandran RadhaKrishnan
25 April 2023, 1:23 pm

திண்டுக்கல்லில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா பத்திரிகையாளரை சந்தித்து பேசினார்.

அப்போது அவர் கூறுகையில், வருகிற மே 5ம் தேதி ஈரோட்டில் வணிகர் உரிமை முழங்க மாநாடு மற்றும் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் 40 வது மாநில மாநாடு சிறப்பாக நடைபெற உள்ளது. இதில் பல்வேறு சிறப்பு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளது.

தமிழகத்தில் 12 மணி நேர வேலை நேரத்தை சீரமைத்து அமல்படுத்த தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.

தொழிலாளர்கள் இல்லாமல் முதலாளிகள் இல்லை. முதலாளிகள் இல்லாமல் தொழிலாளர்கள் இல்லை. இப்பொழுது பல இடங்களில் தற்போது தொழிலாளர்கள் 12 மணி நேரம் வேலை பார்த்துக் கொண்டு இருக்கின்றனர்.

அவர்களுக்கு அதற்கான கூலி கொடுத்து வருகிறோம். தமிழகத்தில் அதிகமான வெளிநாட்டு தொழிற்சாலைகள் கால் ஊன்ற வேண்டும் என்பதற்காக தான் அரசு இந்த முடிவை எடுத்துள்ளது.

12 மணி நேர வேலையில் தொழிலாளர்களுக்கு வேறு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் தொழிற்சங்கங்கள் போராட்டம் நடத்த வேண்டியது தான். நியாயமான கோரிக்கைகளுக்கு எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவிக்க வேண்டும்.

நாடு முன்னேறும் போது இதுபோன்ற இடர்பாடுகள் ஏற்படுவது சகஜம். இதை எல்லாம் தாண்டி தமிழக முதல்வர் தளர்வு செய்யப்பட வேண்டும். விரைவாக அனுமதி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  • Allu Arjun arrest and controversy பூகம்பமாய் வெடிக்கும் அல்லு அர்ஜுன் பிரச்சனை…வீட்டின் முன்பு கலவரம்…கண்டுகொள்ளாத போலீஸார்..!
  • Views: - 334

    0

    0