12 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் ; தமிழக அரசு பிறப்பித்த புதிய உத்தரவு..!!

Author: Babu Lakshmanan
19 June 2023, 3:44 pm

சென்னை ; தமிழகத்தில் 12 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

நிர்வாக வசதிக்காக அவ்வப்போது அரசுத்துறைகளில் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில், தற்போது, தமிழகத்தின் 12 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்ட விபரம் பின்வருமாறு ;-

பீலா ராஜேஷ் – எரிசக்தி துறை முதன்மை செயலாளர்
ரமேஷ் சந்த் மீனா – சிறப்பு திட்ட செயலாக்கத்துறை செயலாளர்
வீர் பிரதாப் சிங் – வணிகவரித்துறை துணை ஆணையர்
விஜயராணி – கூட்டுறவுத்துறை கூடுதல் பதிவாளர்

ஆசியா மரியம் – சிறுபாண்மையினர் நலத்துறை இயக்குநர்
சந்திரசேகர் சாகாமுரி – பட்டு வளர்ச்சித்துறை இயக்குநர்
எஸ்.விஜயகுமார் – தமிழ்நாடு நகர்ப்புற கட்டமைப்பு நிதியத்தின் முதன்மை செயலாளர்
ஸ்வர்ணா – தமிழ்நாடு சிறுதொழில் கழகத்தின் தலைவர்

கண்ணன் – தமிழ்நாடு சிமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் லிமிடெட் நிர்வாக இயக்குனர்
ரஞ்சீத் சிங் – நாகப்பட்டினம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட அதிகாரி
அலர்மேல்மங்கை – சேலம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட அதிகாரி
சுரேஷ் குமார் – தமிழ்நாடு காதி மற்றும் கிராமத் தொழில் வாரியத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

  • Ilaiyaraaja music concert updates அடுத்தடுத்து இசை நிகழ்ச்சி ரெடி…அறிவிப்பை வெளியிட்ட இளையராஜா…ரசிகர்கள் ஆவலுடன் காத்திருப்பு..!