கெட்டுப்போன 12 கிலோ மீன்கள்.. விற்பனைக்கு வைத்திருந்த வியாபாரிகள் : மீன் மார்க்கெட்டில் பறிமுதல் செய்த அதிகாரிகள்!!

Author: Udayachandran RadhaKrishnan
2 June 2022, 9:31 pm

வேலூர் : மீன் மார்க்கெட்டில் அதிகாரிகள் திடீர் ஆய்வு செய்ததில் 12 கிலோ கெட்டுப்போன மீன்கள் பறிமுதல் செய்த அதிகாரிகள் வியாபாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்தனர்.

வேலூர் மாநகர் மக்கான் பகுதியில் உள்ள வேலூர் மீன்மார்கெட்டில் உணவு பாதுகாப்பு துறை மற்றும் மீன் வளத்துறை அதிகார்கள் அடங்கிய குழுவினர் இன்று காலை திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

ஆய்வின் போது இறால் உட்பட 12 கிலோ கேட்டுப்போன மீன்கள் விற்பனைக்கு வைத்திருந்தது தெரியவந்தது. அவற்றை பறிமுதல் செய்து உடனடியாக குப்பையில் கொட்டி அழித்தனர்.

மேலும் கெட்டுப்போன மீன்களை பொது மக்களுக்கு விற்பனை செய்ய கூடாது என்றும் மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் வியாபாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்தனர்.

மேலும் தற்போது தமிழகத்தில் மீன்பிடி தடை காலம் உள்ளதால் கர்நாடக, கேரளா உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வேலூர் மீன் மார்கெட்டுக்கு மீன்கள் கொண்டு வரப்படுவதால் அவைகள் பார்மலின் ரசாயனம் போட்டு பதப்படுத்தப்பட்டுள்ளதா என்றும் மீன்கள் மீது PH மீட்டர் மூலம் சோதனையிட்டு ஆய்வு செய்தனர். மேலும் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் ரசாயனங்களை பயன்படுத்த வேண்டாம் என்றும் வியாபாரிகளை அறிவுறுத்தினர்

  • what is the problem on sikandar salman khan asks people படத்துல என்ன பிரச்சனை, உங்க கருத்தை சொல்லுங்க- பப்ளிக்கை நேரடியாக சந்தித்த சல்மான் கான்!