கத்தி முனையில் 12 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை : இளைஞருக்கு 70 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி அதிரடி தீர்ப்பு!!
Author: Udayachandran RadhaKrishnan19 April 2022, 7:12 pm
திருப்பூர் : 12 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த நபருக்கு 70 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கிய திருப்பூர் மகிளா நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.
திருப்பூர் மாவட்டம் உடுமலை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2020ம் ஆண்டு செப்டம்பர் மாதம் மின்சார வாரியத்தில் பணி புரிந்து வந்த நவரசன் என்பவர் தனது வீட்டருகே உள்ள 12 வயது சிறுமியிடம் கத்தியைக் காட்டி மிரட்டி பாலியல் தொந்தரவு அளித்து அதனை செல்போனில் வீடியோ எடுத்து வெளியில் சொன்னால் கொன்றுவிடுவதாக மிரட்டியுள்ளார்.
பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் உடுமலை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனையடுத்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நவரசன் என்பவரை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர் .
இந்த வழக்கு திருப்பூர் மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் குற்றம் சாட்டப்பட்ட நவரசனுக்கு மகிளா நீதிமன்ற நீதிபதி சுகந்தி 70 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 40 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்