பள்ளி பேருந்து மோதி 12ம் வகுப்பு மாணவன் பரிதாப பலி: பேருந்துக்காக காத்திருந்த போது விபரீதம்…பெற்றோர் கதறல்..!

Author: Rajesh
24 April 2022, 10:33 am

தென்காசி: கடையம் அருகே மாணவன் மீது பள்ளிப் பேருந்து மோதிய விபத்தில் மாணவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தென்காசி மாவட்டம் கடையம் அருகேயுள்ள ஆழ்வார்குறிச்சி அடுத்த புதுகுடியிருப்பு பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி அருணாச்சலம் என்பவரது மகன் சைலப்பன்.

image

இவர் ஆழ்வார்குறிச்சியில் உள்ள பிரபல தனியார் மேல்நிலைப் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் நேற்று மாலை பள்ளி முடிந்தவுடன் தனது ஊருக்குச் செல்ல ஆழ்வார்குறிச்சி பேருந்து நிலையத்திற்கு வந்த அவர், தனது நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்துள்ளார்.

அப்போது ஆழ்வார்குறிச்சியில் இருந்து பொட்டல்புதூர் செல்வதற்காக வந்த அதே பள்ளிப் பேருந்து எதிர்பாராத விதமாக அங்கு நின்று கொண்டிருந்த மாணவன் மீது மோதியதாக கூறப்படுகிறது. இதில், படுகாயமடைந்த மாணவனை அப்பகுதியிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்று முதலுதவி அளித்து, அம்பை அரசு மருத்துவமனைக்கு உடனடியாக கொண்டு செல்லப்பட்டார்.

image

சிகிச்சை மேற்கொண்டு பின்னர் நெல்லை அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே மாணவன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து ஆழ்வார்குறிச்சி போலீசார் பள்ளி பேருந்து ஓட்டுநர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • dhanush paid 25 lakhs hospital bill for his director illness நிஜமாகவே கர்ணன்தான்!… தன்னை வைத்து இயக்கிய இயக்குனருக்கு மாபெரும் உதவி செய்த தனுஷ்…