வீட்டில் தனியாக இருந்த பள்ளி மாணவன் தூக்கிட்டு தற்கொலை: காரணம் அறிந்து அதிர்ந்து போன பெற்றோர்…காஞ்சியில் சோகம்..!!

Author: Rajesh
26 April 2022, 11:14 am

காஞ்சிபுரம்: வீட்டில் தனியாக இருந்த 12ம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு 49 வது வார்டுக்குட்பட்ட வேதாசலம்நகர் பாரதியார் தெருவை சேர்ந்தவர் பாலாஜி (வயது 40). இவர் ஆட்டோ ஓட்டுநராக பணியாற்றி வருகின்றார். இவரது மனைவி காஞ்சிபுரம் அருகே மாங்கால் கூட்டுசாலையில் உள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை செய்து வருகின்றார். இவர்களுக்கு விஜய் (வயது17) என்ற மகனும் செல்வி என்ற ஒரு மகளும் உள்ளனர்.

விஜய் காஞ்சிபுரம் ஆண்டர்சன் மேல்நிலைப் பள்ளியில் +2 படித்து வருகிறார். கொரோனாதொற்று காலத்தில் வீட்டிலேயே அடைபட்டு கிடந்த விஜய்க்கு மனநலம் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மீண்டும் பள்ளிக்கூடங்கள் திறந்த நிலையில் விஜய் அவ்வப்போது பள்ளிக்கு செல்வதில்லை என பெற்றோர்கள் தெரிவித்தனர்.

மேலும் ஐந்தாயிரம் ரூபாய் கல்வி கட்டணம் கட்ட பள்ளிக்கூடத்தில் ஆசிரியர்கள் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் உடன் படிக்கும் பள்ளி மாணவர்கள் அவ்வப்போது தன்னை கிண்டல் செய்வதாகவும் விஜய் வீட்டில் கூறியுள்ளார்.

இந்நிலையில் இன்று பள்ளிக்கூடம் விடுமுறை என கூறிவிட்டு வீட்டில் தனியாக இருந்துள்ளார். பாலாஜி ஒரு துக்க நிகழ்ச்சிக்காக வெளியூர் சென்று விட்டார். அவர் மனைவியும் வேலைக்கு சென்று விட்டார். மகள் செல்வியும் பள்ளிக்கூடம் சென்று விட்டார். வீட்டில் தனியாக இருந்த மாணவன் விஜய் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதை அறியாத விஜய்யின் பெற்றோர்கள் வீட்டுக்கு வந்து சற்று நேரம் கழித்து விஜய்யை தேடி உள்ளார்கள். மற்றொரு அறையின் மேற்கூறையில் உள்ள ஹாங்கரில் கயிற்றை மாட்டி விஜய் தற்கொலை செய்து கொண்டதை கண்டு அதிர்வுற்றனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்க்கு வந்த காஞ்சிபுரம் தாலுகா போலீசார் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட +2 மாணவன் விஜய்யின் உடலை கைபற்றி பிரோத பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காஞ்சிபுரத்தில் +2 மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 1076

    0

    0