தேனியில் பன்னிரண்டாம் வகுப்பில் 494 மதிப்பெண் எடுத்த பள்ளி மாணவன் மதிப்பெண் குறைவு என்ற வருத்தத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
தேனி மாவட்டம் கம்பம் கிளப் ரோடு மணி நகரத்தில் குடியிருக்கும் கண்ணன் மகன் ஜெயவர்மன் (17) இவர் கம்பத்தில் உள்ள தனியார் பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு படித்து வந்தார். தற்பொழுது நடைபெற்ற பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் 600 க்கு 494 மதிப்பெண்கள் எடுத்துள்ளார். இந்த நிலையில், மாணவன் வீட்டில் தனியாக இருந்த பொழுது தனது வீட்டின் மூன்றாவது மாடியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டான்.
வெகு நேரமாக வீட்டில் ஆள் இல்லாததால், உறவினர்கள் மாணவனை தேடிப் பார்த்த பொழுது, மாடியில் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்பு கம்பம் தெற்கு காவல் நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தூக்கில் தொங்கிய மாணவனின் உடலை பிரேத பரிசோதனைக்காக கம்பம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் படிக்க: சிறந்த எதிர்காலத்தை நோக்கி ஒருஅடி முன்வைத்துள்ளீர்கள்… 10ம் வகுப்பு மாணவர்களுக்கு நம்பிக்கை கொடுத்த அண்ணாமலை!
மேலும், நடந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். முதல்கட்ட விசாரணையில், மாணவன் மதிப்பெண்கள் வெளியிட்ட கடந்த இரண்டு நாட்களாக நான் நினைத்தது போல் மதிப்பெண் எனக்கு கிடைக்கவில்லை என மன உளைச்சலை இருந்ததாக உறவினர்கள் தெரிவித்தனர்.
தான் 500க்கு மேல் மதிப்பெண் வாங்குவேன் என நினைத்திருந்ததாகவும், தன்னால் 500க்கு மேல் வாங்க முடியவில்லை என மன அழுத்தத்தினால் தற்கொலை செய்து கொண்டதாக உறவினர்கள் தெரிவித்தனர்.
திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…
தன்னுடைய படம் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் 21 ஆம் தேதி…
ரசிகரின் செயலால் கடுப்பான உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் உன்னி முகுந்த்,சமீபத்தில் இவருடைய…
வசூலில் மந்தமாகும் NEEK தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில்…
விஜய் நடிக்காதற்கு காரணம் என்ன விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சண்டக்கோழி,இப்படம் பக்கா…
அரையிறுதி வாய்ப்பு யாருக்கு கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்…
This website uses cookies.