பள்ளிக்கு தடா போட பாலியல் கொடுமையைக் கையிலெடுத்த +2 மாணவி.. இறுதியில் ட்விஸ்ட்!

Author: Hariharasudhan
21 February 2025, 2:57 pm

பள்ளிக்குச் செல்ல விரும்பாத நிலையில், போலியாக பாலியல் வன்கொடுமை புகார் அளித்த 12ம் வகுப்பு மாணவிக்கு போலீசார் அறிவுரை வழங்கினர்.

நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில், கடந்த சில நாட்களுக்கு முன்பு 12ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானதாக போலீசில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரில், “வழக்கம் போல் பள்ளி முடிந்து மாலையில் வீடு திரும்பி கொண்டிருந்த சிறுமியை, இருவர் மயக்க மருந்து தடவிய கைக்குட்டையைப் பயன்படுத்து முகத்தில் அழுத்தியுள்ளனர்.

பின்னர், மாணவியை வனப்பகுதிக்கு தூக்கிச் சென்று பாலியல் வன்கொடுமை செய்தனர். மேலும், மாணவியை மதுபாட்டில்களால் தாக்கியதாக”வும் மாணவி புகாரில் கூறியிருந்தார். இதன்படி, இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், விசாரணை நடத்தினர்.

அதன் ஒரு பகுதியாக, மாணவியை மருத்துவப் பரிசோதனைக்காக அழைத்துச் சென்றனர். ஆனால், அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகவில்லை எனத் தெரிவித்தது மட்டுமின்றி, மதுபாட்டிலால் தாக்கியதற்கான காயங்கள் எதுவும் இல்லை என்றும் கூறியுள்ளனர்.

False Sexual assault case in Nilgiris

இதனால் சந்தேகமடைந்த போலீசார், அந்தச் சிறுமி பள்ளிக்குச் செல்லும் வழியில் இருக்கும் சிசிடிவி கேமராவை ஆய்வு செய்துள்ளனர். அதில், அந்த சிறுமி பள்ளிக்குச் சென்று வருவது பதிவாகி இருந்துள்ளது. அதேநேரம், சந்தேகப்படும்படியாக எதுவும் பதிவாகவில்லை என்பதால், மாணவியிடம் போலீசார் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தியுள்ளனர்.

இதையும் படிங்க: அஜித்துடன் இணையும் பிரபலம்.. 25 வருடங்களுக்கு பிறகு ஜோடி சேர்ந்த நடிகை!

இந்த விசாரணையில், அந்தச் சிறுமி ஒரு இளைஞரைக் காதலித்து வந்துள்ளார். ஒரு கட்டத்தில் இந்த விவகாரம் சிறுமியின் வீட்டுக்குத் தெரியவர, அவரைக் கண்டித்துள்ளனர். மேலும், சிறுமிக்கு படிப்பின் மீது பெரிய அளவில் நாட்டம் இல்லாததாலும், இதனால் பள்ளி செல்ல விரும்பாத நிலையிலும், தன்னை சிலர் பாலியல் வன்கொடுமை செய்ததாக போலியான புகார் அளித்தது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து, சிறுமிக்கு அறிவுரை வழங்கிய போலீசார், அவரை பெற்றோருடன் அனுப்பி வைத்தனர்.

  • Anirudh is in love with the daughter of a famous businessman. பிரபல தொழிலதிபரின் மகளை காதலிக்கும் அனிருத்.? இவங்களுக்குள்ள இப்படி ஒரு கனெக்ஷனா?