கரூரில் 12 ஆம் வகுப்பு மாணவி தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கரூரை அடுத்த வெண்ணமலை அரசன் நகரைச் சேர்ந்தவர் குமார். இவரது மகள் ஸ்ரீனா (17). இவர் வெண்ணமலையில் உள்ள தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்துள்ளார். ஸ்ரீனாவுக்கு தலையில் பொடுகு பிரச்சனை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவரது பெற்றோர் மாணவிக்கு பாப் கட்டிங் செய்துள்ளனர். இதன் காரணமாக அவர் மன வேதனையில் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், பெற்றோருடன் நேற்று அதிகாலையில் தூங்கிக் கொண்டிருந்த போது மகளை காணாமல் பெற்றோர் தேடியுள்ளனர். அப்போது வீட்டினுள் தூக்கு போட்டுக் கொண்ட நிலையில் இருந்துள்ளார். மாணவியை மீட்ட பெற்றோர் சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர்.
அவரை பரிசோதித்த மருத்துவர் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளார். இது பற்றி மாணவியின் தந்தை வெங்கமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். பிரேத பரிசோதனைக்குப் பிறகு மாணவியின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது
நடிகை மௌனிகா, சில படங்களில் நடித்த அவர் தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார். அவர் மறைந்த இயக்குநர் பாலுமகேந்திராவின் இரண்டாவது…
தாறுமாறு கலெக்சன் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியான “குட் பேட் அக்லி”…
செந்தில் பாலாஜியின் ஜாமீனை ரத்து செய்ய கோரிய வழக்கை முடித்து வைத்தது உச்சநீதிமன்றம். செந்தில் பாலாஜி ஜாமீனில் வெளி வந்ததும்…
ஸ்ருதிஹாசனின் பிரேக்கப் கமல்ஹாசனின் மகளான ஸ்ருதிஹாசன் சில ஆண்டுகளாகவே மைக்கேல் கோர்சேல் என்ற இத்தாலியரை காதலித்து வந்தார். இருவரும் லிவ்…
புதுச்சேரி கருவடிக்குப்பம் கிராமத்தை சேர்ந்த 40 வயதான உமாசங்கர் புதுச்சேரி மாலிந இளைஞரணித் துணைத் தலைவராக உள்ளார். கடநத் ஒரு…
மூக்குத்தி அம்மன் 2 “கேங்கர்ஸ்” திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது சுந்தர் சி “மூக்குத்தி அம்மன் 2” திரைப்படத்தை இயக்கி…
This website uses cookies.