விஷச்சாராயம் குடித்து 13 பேர் பலியான விவகாரம்…. பிரபல சாராய விற்பனை கும்பலுக்கு ஆட்சியர் வைத்த செக்!!!

Author: Udayachandran RadhaKrishnan
8 July 2023, 5:42 pm

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே எக்கியார்குப்பத்தில் கடந்த மாதம் 13 ம் தேதி விஷச்சாராயம்( மெத்தனால்) குடித்து சங்கர், தரணி வேல், மண்ணாங்கட்டி, சந்திரன், சுரேஷ் உள்ளிட்ட 13 பேர் உயிரிழந்தனர்.

அதேபோல் செங்கல்பட்டு மாவட்டத்தில் 8 பேர் உயிரிழந்தனர். இந்த வழக்கில் கெமிக்கல் உரிமையாளர் இளைநம்பி, ஏழுமலை, வர்க்கத்துல்லா, மற்றும் சாராய வியாபாரிகள் அமரன், ஆறுமுகம், ரவி ,முத்து, மண்ணாங்கட்டி உள்ளிட்ட 11 பேரை கைது செய்து சி பி சி டி போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்

இந்த நிலையில் வழக்கில் சிறையில் உள்ள பிரபல மரக்காணம் பகுதியைச் சேர்ந்த சாராய வியபாரிகள் முத்து, அமரன், ரவி, மண்ணாங்கட்டி, ஆறுமுகம் ஆகிய 5 பேரையும் விழுப்புரம் சிபிசிஐடி போலிசார் பரிந்துரையின் பேரில் குண்டர் தடுப்புச்சட்டத்தில் அடைக்க விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் சி.பழனி உத்தரவிட்டுள்ளார்

  • நான் பார்க்காத பிரச்சனையா..’டிராகன்’ பட இயக்குனருக்கு சிம்பு கொடுத்த தரமான அட்வைஸ்.!