இன்ஸ்டாகிராம் பழக்கம்.. 13 வயது சிறுமி கூட்டுப் பாலியல் வன்கொடுமை!
Author: Hariharasudhan10 December 2024, 7:58 pm
இன்ஸ்டாகிராமில் பழகிய நபர் உள்பட பலரால் நாமக்கலைச் சேர்ந்த 13 வயது சிறுமி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர் 9ஆம் வகுப்பு படிக்கும் 13 வயது சிறுமி. இவர் கடந்த அக்டோபர் மாதம் பள்ளிக்குச் செல்வதாக பெற்றோரிடம் கூறி விட்டுச் சென்று உள்ளார், ஆனால் வீடு திரும்பவில்லை. இதனால் பதறிப்போன பெற்றோர் தங்களது மகளைக் காணவில்லை என ஜேடர்பாளையம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இந்த நிலையில், வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரித்து வந்தனர். அதில், அந்த மாணவிக்கு இன்ஸ்டாகிராமில், திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த ஒரு இளைஞர் உடன் பழக்கம் ஏற்பட்டு உள்ளது. இது நாளடைவில் காதலாகவும் மாறி உள்ளது. இந்த நிலையில், சம்பவத்தன்று தாயின் செல்போனை மாணவி எடுத்துச் சென்று உள்ளார்.
எனவே, அதனை வைத்து போலீசார் விசாரித்ததிதில், மாணவி திருவண்ணாமலையில் இருப்பது தெரிய வந்து உள்ளது. உடனடியாக அங்கு சென்ற போலீசார், மாணவியை மீட்டனர். பின்னர் சிறுமியிடம் மேற்கொண்ட விசாரணையில், சிறுமியை 5 பேர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தது தெரிய வந்து உள்ளது.
மேலும், இன்ஸ்டாகிராமில் ஏற்பட்ட பழக்கம் காரணமாக, நேரில் பார்ப்பதற்காக மாணவியை அந்த இளைஞர் திருவண்ணாமலைக்கு வரவழைத்துள்ளார். பின்னர், சிறுமியை நண்பர்கள் 4 பேருடன் சேர்ந்து அவர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளது விசாரணையில் தெரிய வந்து உள்ளது.
இதையும் படிங்க: அண்ணாமலை பைல்ஸ் 1.. DMK Files 3-க்கு பதில்? திருச்சி சூர்யா பரபரப்பு பதிவு!
இந்த நிலையில், 9ஆம் வகுப்பு மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக விக்னேஷ் (26), சஞ்சய் (20), ஆகாஷ் (22), இளங்கோவன் (30) மற்றும் செல்வகுமார் (19) ஆகிய 5 பேர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீசார், அவர்களைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.